Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அடையாளத்தையே மாற்றும் உலகநாயகன்.. ஹாலிவுட் நடிகர்களை குறிவைக்கும் கமல்

அடையாளத்தையே மாற்றும் உலகநாயகன்.. ஹாலிவுட் நடிகர்களை குறிவைக்கும் கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களுக்கு பிறகு திரையில் தோன்றிய படம் தான் விக்ரம். இந்தப் படம் ரிலீஸான ஜூன் மூன்றாம் தேதி முதல் இன்று வரை எந்தவித நெகட்டிவ் கமெண்ட்களும் இந்த படத்திற்கு வராததால் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களுக்கு பிறகு திரையில் தோன்றிய படம் தான் விக்ரம். இந்தப் படம் ரிலீஸான ஜூன் மூன்றாம் தேதி முதல் இன்று வரை எந்தவித நெகட்டிவ் கமெண்ட்களும் இந்த படத்திற்கு வராததால் தொடர்ந்து திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

300 கோடிக்கு மேல் இந்திய அளவில் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் இதுவரை உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த எல்லா படத்தின் வசூல் சாதனையையும் முறியடித்து பாக்ஸ் ஆஃபிஸ் நாயகன் வரிசையில் இணைத்திருக்கிறது. விக்ரம் படம் கொடுத்த மெகா வெற்றியினால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கமல்.

இந்த படத்திற்கு அப்புறம் கமல் நடிக்கப்போகும் கதாபாத்திரங்கள் எல்லாம் வேற லெவல் இருக்குமாம். அவர் பழைய பாணி நடிப்பை வேண்டாமென ஒதுக்கி விட்டதாக தெரிகிறது. ஒருகாலத்தில் கமலுக்கு அடையாளம் என்றால் காதல் படங்கள்தான். ரொமான்ஸ் கலந்த படங்களில் அனைவரையும் கவரும் கமல் இப்பொழுது அந்த மாதிரி நடிப்பதை கைவிட போகிறாராம்.

இப்பொழுது ஏஜென்ட், ஸ்பை, சஸ்பென்ஸ், திரில்லர், பிரம்மாண்டம், அதிரடி ஆக்ஷன் என ஹாலிவுட் படங்களை குறி வைத்ததாக தெரிகிறது. ஜேசன் சத்தோம், டாம் குரூஸ், ஜேம்ஸ் பாண்ட், வின் டீசல் போன்றவர்கள் படங்களை மாறி நடிக்கப் போவதாக உலகநாயகன் கமலஹாசன் திட்டம் போட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவை அடுத்த இடத்துக்கு கொண்டு செல்ல உழைத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சினிமாவை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் உலகநாயகனுக்கு அவருடைய நடிப்பையும் இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

இதற்காக ஒரு ரொமான்ஸ் ஹீரோவாக இருந்த தன்னுடைய அடையாளத்தை மாற்றி அமைத்து கொண்ட  உலகநாயகன் கமலஹாசன், ஹாலிவுட் நடிகர்களை குறிவைத்து அவர்களைப்போல் நடிப்பில் பின்னிப் பெடல் எடுக்க இனி வித்தியாசமான கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.