Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கை நிறைய அள்ளிக் கொடுத்ததா கையை கடித்ததா.? தக் லைஃப் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

கை நிறைய அள்ளிக் கொடுத்ததா கையை கடித்ததா.? தக் லைஃப் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Thug Life First Day Collection: கமல், மணிரத்னம் கூட்டணியின் தக் லைஃப் நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்திற்கு தற்போது சுமாரான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக கமல் ப்ரமோஷனுக்கு மட்டுமே […]

Thug Life First Day Collection: கமல், மணிரத்னம் கூட்டணியின் தக் லைஃப் நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்திற்கு தற்போது சுமாரான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.

ஒரு தயாரிப்பாளராக கமல் ப்ரமோஷனுக்கு மட்டுமே நிறைய செலவு செய்திருந்தார். அதேபோல் அவரும் பம்பரமாக சுற்றி பல மேடைகளில் படத்தை பிரமோட் செய்தார்.

ஆனால் அத்தனையும் கோவிந்தாவா என்பது போல் இருக்கிறது தற்போதைய நிலை. படத்தை பார்த்த பலரும் கேங்ஸ்டர் படம்னு சொல்லிட்டு என்னத்த உருட்டி இருக்கீங்க.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

எப்படியோ படத்தை பார்த்துட்டு உசுரோட வீடு வந்து சேர்ந்துட்டேன். போதும்டா சாமி என கிண்டலான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். இதனால் படம் பார்க்காதவர்கள் நல்ல வேளை காசு மிச்சம் என்ற ரீதியில் சைலன்ட் மோடுக்கு சென்று விட்டனர்.

இப்படியான விமர்சனங்களை பெற்றுள்ள படம் ஒரு தயாரிப்பாளராக கமலுக்கு லாபமா நஷ்டமா என்பதை பற்றி காண்போம். பட ரிலீஸ்க்கு முன்பு டிக்கெட் முன்பதிவை பொருத்தவரையில் எல்லாமே ஹவுஸ்ஃபுல் தான்.

இதனால் முதல் நாளில் படம் 50 கோடிகளை தாண்டி வசூலித்து விடும் என கருத்து கணிப்புகள் வெளிவந்தது. ஆனால் தற்போதைய நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது.

அதன்படி தக் லைப் முதல் நாளில் வெறும் 17 கோடிகளை மட்டுமே இந்திய அளவில் வசூலித்திருக்கிறது. இது பெரும் அதிர்ச்சி தான். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கப்பட்டு விட்டது.

அதனால் கூட இந்த சரிவு இருக்கலாம். ஆனாலும் படம் அந்த அளவுக்கு வொர்த் இல்லை என்ற கருத்தும் ஒரு பக்கம் இருக்கிறது. இந்த சூழலில் வார இறுதியில் படம் வசூலை அள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.