Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா தக் லைஃப்.? முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் கணிப்பு

இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா தக் லைஃப்.? முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் கணிப்பு

Thug Life Collection: மணிரத்னம், கமல் பல வருடங்களுக்குப் பிறகு தக் லைஃப் படத்தின் மூலம் இணைத்துள்ளனர். நாளை வெளியாக இருக்கும் இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதற்கான பிரமோஷன் ஒரு மாதத்திற்கு […]

Thug Life Collection: மணிரத்னம், கமல் பல வருடங்களுக்குப் பிறகு தக் லைஃப் படத்தின் மூலம் இணைத்துள்ளனர். நாளை வெளியாக இருக்கும் இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதற்கான பிரமோஷன் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. கமலும் ஆர்வத்தோடு அதில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

ஆனால் தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி என சொன்ன அவருடைய கருத்து இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கர்நாடகாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்க சொல்லி பெரும் அலப்பறையை நடந்து வருகிறது.

இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா தக் லைஃப்.?

ஆனாலும் இதற்கெல்லாம் ஆண்டவர் அஞ்ச மாட்டார். மன்னிப்பு எதற்கு என விளக்கம் மட்டும் தான் கொடுத்துள்ளார். இதனால் அந்த தீ இன்னும் கொழுந்து விட்டு எரிகிறது.

மேலும் கர்நாடகாவில் படம் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்து போன கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தக் லைஃப் படம் இங்கு வெளியாவதை நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்துள்ளது.

இப்படி பெரும் பரபரப்பு இருக்கும் நிலையில் படத்தின் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துள்ளது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் சரசரவென டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர்.

அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் என்ற நிலை இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் 50 முதல் 60 கோடியாக இருக்கும் என கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.

விக்ரம் படத்திற்கு பிறகு இப்படம் மாபெரும் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் படத்தின் வசூலுக்கு குறைவிருக்காது என்பது மட்டும் உறுதி.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.