வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

மகளுக்காக வெளிநாடு வரை சென்று உரிமத்தை பெற்ற கமல்.. பிரயோஜனம் இல்லாமல் சொதப்பிட்டாங்க!

இப்போதெல்லாம் ஹாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்ற பல காட்சிகளை நம்ம ஊரு இயக்குனர்கள் காப்பி அடித்து படங்களை இயக்கி வருகின்றனர். அப்படி இல்லை என்றால் வெளிநாட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற படங்களின் உரிமையை வாங்கி படத்தை எடுக்கின்றனர். இதில் வெளிநாட்டு தொழில்நுட்பங்களையும், திரைப்படங்களையும் அதிக அளவில் கோலிவுட்டுக்கு கொண்டு வருவதில் கமலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

அந்த வகையில் அவர் சில வருடங்களுக்கு முன்பு பிரஞ்சு மொழியில் நல்ல வரவேற்பை பெற்ற இரு படங்களின் உரிமையை வாங்கி இருந்தார். அதில் ஒரு திரைப்படத்தில் அவரே நடித்தார். மற்றொரு திரைப்படத்தை நடிகர் விக்ரமுக்காக விட்டுக் கொடுத்தார். ஆனால் அந்த இரண்டு படங்களையும் கமல் தன் சொந்த தயாரிப்பில் தான் தயாரித்து இருந்தார்.

Also read : மனநலம் குன்றிய நாயகனாக கமல் அசத்திய 5 படங்கள்.. பயத்திலேயே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த தெனாலி

அந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு போகாமல் படுதோல்வி அடைந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு கமல், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த தூங்காவனம் படம் தான் அது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த திரைப்படம் அட்டர் ஃபிளாப் ஆனது.

அதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு விக்ரம், அக்சரா ஹாசன் நடிப்பில் கடாரம் கொண்டான் திரைப்படம் வெளிவந்தது. ஆக்சன் திரில்லர் பாணியில் வெளியான அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் தோல்வி பெற்றது.

Also read : கமல் நடிப்பில் ‘A’ சான்றிதழ் வாங்கிய 3 படங்கள்.. வாய்ப்பை விடாமல் ஒப்பு கொண்ட ஆண்டவர்

இந்த இரண்டு படங்களையும் ராஜேஷ் எம் செல்வா இயக்கியிருந்தார். மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு எதிர்பார்ப்பை தூண்டி இருந்த இந்த திரைப்படங்கள் தோல்வி அடைந்தது பலருக்கும் ஆச்சரியம்தான். ஆனால் கமலின் திரைப்படங்கள் ஆரம்பத்தில் இப்படி தோல்வி அடைந்தாலும் சில வருடங்கள் கழித்து அதே படம் ரசிகர்களால் பெரிய அளவில் விரும்பப்படும்.

இதற்கு உதாரணமாக ஆளவந்தான் உட்பட பல திரைப்படங்களை சொல்லலாம். அந்த வகையில் இந்த இரண்டு படங்களும் இப்பவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இதுதான் உலக நாயகனுக்கு கிடைக்கும் வெற்றி. இப்படி அவருடைய முயற்சி தோல்விகளை சந்தித்தாலும் தன்னுடைய தேடலை மட்டும் அவர் நிறுத்துவது கிடையாது.

Also read : கமலின் கனவை நினைவாக்க வரும் நடிப்பு அரக்கன்.. மீண்டும் ஆரம்பமாகும் மருதநாயகம்

- Advertisement -spot_img

Trending News