Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அன்புக்காக மட்டுமே செய்த சூர்யா.. வேற லெவலில் திருப்பி செய்த ஆண்டவர்

அன்புக்காக மட்டுமே செய்த சூர்யா.. வேற லெவலில் திருப்பி செய்த ஆண்டவர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து மிரட்டியுள்ளனர். ஆனால் சூர்யா அவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்யும் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து மிரட்டியுள்ளனர்.

ஆனால் சூர்யா அவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியுள்ளார். படத்தின் கடைசி சில நிமிடங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் தற்போது அவருடைய அந்த கேரக்டர்தான் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அவரின் இந்த கதாபாத்திரம் அடுத்த பாகத்திலும் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் வெறும் அன்புக்காக மட்டுமே அப்படி ஒரு காட்சியில் நடித்துக் கொடுத்த சூர்யாவுக்கு கமல் மிகவும் விலை உயர்ந்த ஒரு பரிசை கொடுத்து அசத்தி இருக்கிறார்.

இதுபற்றி கூறிய லோகேஷ் கனகராஜ் முதலில் இந்த கேரக்டர் பற்றி நானும் கமல் சாரும் பேசினோம். அதன் பிறகு கடைசி நேரத்தில்தான் சூர்யா சார் இந்த கேரக்டரில் நடிப்பதற்கு எந்த தயக்கமும் இன்றி உள்ளே வந்தார். அவர் கமல் சாரின் மேல் வைத்திருந்த பாசத்தினால் மட்டுமே இதை செய்தார் என்று கூறியிருக்கிறார்.

மேலும் சூர்யா, கமலை சந்திக்க அவருடைய வீட்டிற்கு சென்றபோது கமல் பல வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்த தன்னுடைய வாட்சை அவருக்கு பரிசளித்திருக்கிறார். அதன் விலை கிட்டத்தட்ட 40 லட்சத்துக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது.

சூர்யா சமீபகாலமாக பல மக்கள் பிரச்சனை சம்பந்தப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியிருக்கும் போது தன்னுடைய இமேஜ் பற்றி கவலைப்படாமல் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். அதற்காகத்தான் கமல் தன்னுடைய அன்பை இப்படி திருப்பிக் கொடுத்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதுதான் உண்மையான அன்பு என்று இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.