Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

20 கோடி போனா என்ன.? வியக்க வைக்கும் கமலின் சொத்து மதிப்பு

20 கோடி போனா என்ன.? வியக்க வைக்கும் கமலின் சொத்து மதிப்பு

Kamal : இப்போது கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனை தக் லைஃப் படத்தை பற்றி தான். இந்த படம் வருகின்ற வியாழக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கன்னட மொழியை பற்றி கமல் […]

Kamal : இப்போது கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனை தக் லைஃப் படத்தை பற்றி தான். இந்த படம் வருகின்ற வியாழக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

கன்னட மொழியை பற்றி கமல் பேசிய நிலையில் மன்னிப்பு கேட்டால் தான் அங்கு படம் வெளியிடப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார். தக் லைஃப் படத்தை மணிரத்னத்துடன் இணைந்து கமல் தான் தயாரித்துள்ளார்.

கர்நாடகாவில் வெளியாகாததால் கிட்டத்தட்ட 20 கோடி நஷ்டம் கமலுக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது. எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று கமல் உறுதியாக இருக்கும் நிலையில் அவரது சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.

கமலின் சொத்து மதிப்பு

களத்தூர் கண்ணம்மா படத்தில் இருந்து அவரது திரைப்பயணம் தொடங்கியது. சினிமாவில் ஒரு ஆல் ரவுண்டராக வலம் வரும் கமல் நடிப்பை தாண்டி இயக்குனர், எழுத்தாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்திருக்கிறார்‌. தமிழ் சினிமாவில் பல தொழில்நுட்பத்தை கொண்டு வந்தது கமல் தான்.

இப்போதும் அமெரிக்கா சென்று ஏஐ தொழில்நுட்பத்தை படித்துவிட்டு தான் வந்திருக்கிறார். கமலின் சொத்து மதிப்பு 450 கோடி என்று கூறப்படுகிறது. தயாரிப்பு, ரியல் எஸ்டேட் என பலவற்றில் கமல் சம்பாதித்து வருகிறார். மேலும் BMW 730LD, Lexus LX 570 ஆகிய கார்களை வைத்திருக்கிறார்.

விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் மீது கமலுக்கு அதிக விருப்பம் இருக்கிறது. கமல் இப்போது ஒரு படத்திற்கு 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். இவ்வாறு 450 கோடி கமலுக்கு சொத்து இருக்கும் நிலையில் தக் லைஃப் படம் கர்நாடகாவால் கொடுக்கும் நஷ்டம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.