வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மீண்டும் விருமாண்டியாக மாறும் கமல்ஹாசன்.. முன்னணி இயக்குனருடன் பக்கா கிராமத்து கதை ரெடி!

பல வித்தியாசமான கேரக்டரில் நடித்து தொடர்ந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் கிராமத்து சாயலில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவை.

அந்த வரிசையில் இவரின் நடிப்பில் வெளியான தேவர் மகன், விருமாண்டி போன்ற திரைப்படங்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக உள்ளது. முறுக்கு மீசையில், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவர் பேசும் அந்த கிராமத்து வசனம் அவருக்கு ஒரு தனி அழகை கொடுக்கும்.

மேலும் கையில் அரிவாளுடன் பக்கா கிராமத்து ஆளாக களமிறங்கி அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கமல்ஹாசன் மீண்டும் அப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறார்.

இதற்காக அவர் குறிப்பிட்ட சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அதில் இயக்குனர் முத்தையா கூறிய கதை கமலுக்கு ரொம்பவும் பிடித்துப் போய் விட்டதாகவும், அந்த கதையில் நடிப்பதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முத்தையாவின் இயக்கத்தில் வெளியான கொம்பன், மருது உள்ளிட்ட பல திரைப்படங்கள் கிராமத்து சாயலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் ஹீரோக்களின் ஆக்ஷன் காட்சிகளும் பட்டையை கிளப்பும். அதன் காரணமாகவே கமலுக்கு அவர் கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதாக தெரிகிறது.

அதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பக்கா கிராமத்து கதையில் நாம் உலக நாயகனை விருமாண்டி தோற்றத்தில் பார்க்கலாம். விரைவில் முத்தையா கமல் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News