திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கார்த்தி நடிக்கப் போகும் நான்கு பார்ட் 2 படங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பிய மெகா கூட்டணி

கார்த்தி தற்போது பிசியான நடிகராக மாறி இருக்கிறார். அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் ரொம்பவும் குஷியில் இருக்கும் கார்த்தி தன்னுடைய அடுத்த பட வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் கார்த்தி நடிப்பில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் இரண்டாம் பாகத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. தற்போது திரையுலகில் பார்ட் 2 திரைப்படங்கள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் கார்த்தியின் நடிப்பில் மட்டும் நான்கு பார்ட் 2 திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது. அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

Also read:வெற்றி இயக்குனரை மதிக்காத கார்த்தி.. அதுக்குன்னு இப்படியா பழி தீர்ப்பது!

பொன்னியின் செல்வன் 2 மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சோழர் கால வரலாற்று நாவலான இந்த கதையில் கார்த்தி வந்திய தேவன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கேரக்டர் தற்போது வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைதி 2 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் இப்படம் வெளிவந்தது. பக்கா ஆக்‌ஷன் திரைப்படமாக வெளிவந்த இப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கைதி 2 அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

Also read:மீண்டும் பொன்னியின் செல்வனை சீண்டி பார்க்கும் காந்தாரா.. எதிர்பார்ப்பை கிளப்பிய அடுத்த கட்ட மோதல்

சர்தார் 2 பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்தி, ராசி கண்ணா, லைலா ஆகியோர் நடித்திருந்த இப்படம் வெளியான ஐந்து நாட்களிலேயே 50 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. அந்த வகையில் படக்குழு தற்போது இப்படத்தின் பார்ட் 2 அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தோழா 2 வம்சி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா நடிப்பில் இப்படம் வெளிவந்தது. முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் வம்சி விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார். அந்த வகையில் கார்த்தி 4 பார்ட் 2 திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார்.

Also read:சிவகார்த்திகேயனை முந்திய கார்த்தி.. பிரின்ஸ், சர்தார் 4 நாள் வசூல் இதுதான்

Trending News