புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீண்டும் சிவகார்த்திகேயனை டார்கெட் செய்யும் கார்த்தி.. ஒதுங்கி போனாலும் விடாத தொல்லை

குறுகிய காலத்திலேயே கிடுகிடுவென உயர்ந்த சிவகார்த்திகேயனுக்கு சில சறுக்கல்களும் வரத்தான் செய்கிறது. அந்த வகையில் இரண்டு மாபெரும் வெற்றி திரைப்படங்களுக்கு அடுத்து அவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. எப்படியாவது அதை சரி செய்யும் முயற்சியில் இருக்கும் அவர் தற்போது மாவீரன் திரைப்படத்தை தான் மிகவும் நம்பிக்கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் அதிதி சங்கர் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இப்படத்தை வரும் பக்ரீத் அன்று வெளியிடலாம் என்று பட குழு முடிவு செய்திருக்கிறார்கள். ஏனென்றால் அப்போது வேறு எந்த படங்களும் போட்டிக்கு இல்லாததால் சிங்கிளாக வந்து வசூலை அள்ளலாம் என்ற ரீதியில் அவர்கள் இருக்கிறார்கள்.

Also read: ஏறிய வேகத்திலேயே சறுக்கிய சிவகார்த்திகேயன்.. தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த எடுத்த அதிரடி முடிவு

ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கார்த்தியும் களத்தில் குதிக்க இருக்கிறாராம். அந்த வகையில் கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படமும் அந்த தேதியில் தான் வெளிவர இருக்கிறது. ராஜுமுருகன் இயக்கும் அந்தப் படத்தின் போஸ்டரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கார்த்தி வேண்டுமென்றே சிவகார்த்திகேயனுக்கு எதிராக படத்தை வெளியிடுகிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனென்றால் கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு இவர்களின் பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதியது. அதில் கார்த்தியின் சர்தார் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also read: பட வாய்ப்புக்காக நரி தந்திரமாக செயல்பட்ட சிவகார்த்திகேயன்.. ஒரே படத்தில் உச்சத்தை தொற்றலாம்னு நினைப்பு

அதை வைத்து தான் தற்போது இப்படி ஒரு பிளான் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்து உள்ளது. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சிவகார்த்திகேயன் தான் அடுத்து என்ன செய்வது என்று முழித்த படி இருக்கிறாராம். அவரே ஒதுங்கிப் போனாலும் தானாக தேடி வரும் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

மேலும் கார்த்தியை எப்படியாவது விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று சிவகுமாரின் குடும்பம் ரொம்பவும் மெனக்கெடுகிறார்கள். அதற்கு தடையாக இருக்கும் சிவகார்த்திகேயனை ஓரம் கட்ட தான் இப்படி சில வேலைகளும் நடக்கிறதாம். அந்த வகையில் மீண்டும் ஆரம்பிக்க இருக்கும் இந்த ரேஸில் யார் வெல்ல போகிறார்கள் என்பது படம் வெளி வந்தால் தெரிந்து விடும்.

Also read: அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டாங்க.! விஜய்யை பார்த்து கூட திருந்தாத சிவகார்த்திகேயன், தனுஷ்

Trending News