வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பீஸ்ட் டிரைலரை பார்த்து கேஜிஎஃப் பட இயக்குனர் போட்ட ட்வீட்.. அவரே தளபதி ரசிகன் தான்டா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

ஏற்கனவே இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல் ஆனது.

அதுமட்டுமல்லாமல் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு வெளியான வலிமை, ஆர்ஆர்ஆர் பட டிரெய்லர்களின் சாதனையை விஜய்யின் பீஸ்ட் முறியடித்துள்ளது.

இந்த மகிழ்ச்சியை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். அவர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக கேஜிஎஃப் பட இயக்குனர் இந்த ட்ரைலரை பார்த்து புகழ்ந்து ஒரு ட்வீட் போட்டு உள்ளார். மாபெரும் வெற்றி பெற்ற கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 14 அதாவது பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு மறுநாள் வெளியாகிறது.

இதனால் ரசிகர்கள் இந்த இரு படங்களுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்று கூறி வருகின்றனர். மேலும் கேஜிஎஃப் படத்தின் டிரைலர் வெளியான போது இயக்குனர் நெல்சன் அதற்கு வாழ்த்து கூறியிருந்தார். தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியானவுடன் கேஜிஎஃப் பட இயக்குனர், ட்ரைலர் செமையா இருக்கு, விஜய் சார் பயர் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

kgf-director-twit-about-beast
kgf-director-twit-about-beast

இதேபோல் அவர் பிகில் படம் வெளியான சமயத்தில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனால் தளபதியின் ரசிகர்கள் கேஜிஎஃப் பட இயக்குனரே விஜய் ரசிகர் தான் என்று ஆரவாரம் செய்து வருகின்றனர்.

Trending News