வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலின் மருதநாயகத்தை போல ரஜினி, அஜித், விஜய்க்கு டிராப் ஆனா 11 படங்களின் லிஸ்ட்

சினிமாவில் சில படங்கள் பூஜை போட்ட பின்பு, பர்ஸ்ட் லுக் வெளியான பிறகு ஏன் படப்பிடிப்பு தொடங்கிய பின்பு கூட டிராப் ஆகி விடும். பொருளாதார சிக்கலில் இருந்து, கருத்து மோதல்கள் என பல காரணங்கள் உண்டு. அப்படி டிராப் ஆன படங்களின் லிஸ்டுகளை பார்ப்போம்

எஸ் ஜே சூர்யா – இறவாகாலம்: தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் SJ சூர்யா மற்றும் ஷிவதா நாயர் நடித்த திரைப்படம் இறவாகாலம். மெர்சல் படத்திற்கு பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் வைத்திருக்கிறது.

விக்ரம் – கரிகாலன்: எல்.ஐ. கண்ணன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருந்த படம் கரிகாலன். இந்த அப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஜரைன் நடித்திருந்தார். பல தொழில்நுட்பங்களோடு உருவாக இருந்த இந்த படம், முதற்கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

தனுஷ்-சூதாடி: தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம் திரைப்படம் முடிந்த கையுடன் தொடங்கப்பட்டது சூதாடி. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாக இருந்தது. சூதாட்டத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் பார்த்திபன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இந்த படம் காரணம் இன்றி கைவிடப்பட்டது.

Also Read: தனுஷ் தேர்ந்தெடுத்த 3 நடிகைகள்.. கடைசி நேரத்தில் மாற்றியதால் தப்பித்த திருச்சிற்றம்பலம்

சிம்பு-கெட்டவன்: TR பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு இயக்கி நடித்த கெட்டவன் படம் 2007 ஆம் ஆண்டு 40 சதவீத படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. இந்த படத்தை 2017 இல் மீண்டும் தொடங்க போவதாக சிம்பு அறிவித்தார். ஆனால் இதுவரை இந்த படத்தை பற்றி எந்த தகவலும் இல்லை.

சூர்யா – துருவநட்சத்திரம்: சூர்யா – கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முதலில் உருவான திரைப்படம் தான் துருவநட்சத்திரம். கதையை முழுமையாக சொல்லாததால் சூர்யா இந்த படத்திலிருந்து விலகி கொண்டார். இப்போது இந்த படத்தில் விக்ரம், சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, திவ்யதர்ஷினி நடித்து வருகின்றனர்.

விஷால் – மதகதராஜா: விஷால், சந்தானம், வரலக்ஷ்மி, அஞ்சலி நடிப்பில், இயக்குனர் சுந்தர சி இயக்கத்தில் உருவான படம் மதகதராஜா . 2013 ஆம் ஆண்டே திரைக்கு வர வேண்டிய மதகதராஜா பொருளாதார சிக்கலால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

Also Read: லத்தி படப்பிடிப்பில் மயங்கி விழுந்த விஷால்.. விபத்தின் பின்னணி

விஜய் சேதுபதி – இடம் பொருள் ஏவல்: விஜய்சேதுபதி- விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான படம். இந்த படம் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

விஜய்- யோகன் அத்தியாயம் ஒன்று: நடிகர் விஜய், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாக இருந்த படம். இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி போனதால் விஜய் AR முருகதாஸுடன் இணைந்து துப்பாக்கி படம் பண்ணினார்.

அஜித்-மிரட்டல்: ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த படம். 15 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தின் அறிவிப்பும், பர்ஸ்ட் லுக்கும் வெளியான நிலையில் இந்த படத்தை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

கமல்ஹாசன் – மருதநாயகம்: மருதநாயகம் கமலஹாசனின் கனவுப்படம் என்றே சொல்லலாம். 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் தொடக்க விழாவிற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் கூட வந்து இருந்தார். பண சிக்கல் காரணமாக இந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டது.

Also Read: கமல்ஹாசன் வலையில் சிக்கிய 5 இளம் நடிகர்கள்.. அப்புறமென்ன வசூல்ராஜா காட்டில் பண மழைதான்

ரஜினி- ராணா: கமலுடன் தசாவதாரத்திற்கு பிறகு KS ரவிக்குமார் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற இருந்த படம். 2011 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க இருந்த போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் இந்த படம் அப்படியே டிராப் ஆகி விட்டது.

Trending News