வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இனி நடிக்கவே கூடாதுன்னு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட 6 பிரபலங்கள்.. அசினுக்கு வந்த கெட்ட நேரம்

List of celebrities given red card in Kollywood: சினிமானிமாவில் இருக்கும் பிரபலங்களின் நடவடிக்கை சரியில்லை என்றால் உடனடியாகவே தமிழ் திரைப்பட நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கங்கள் முன்வந்து அவர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்து சினிமாவை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். அப்படிதான் தமிழில் நடிக்க கூடாது என பன்(ban) பண்ணப்பட்ட ஆறு பிரபலங்களைப் பற்றி பார்ப்போம்.

வடிவேலு: வைகை புயல் வடிவேலு புகழின் உச்சத்தில் இருந்த சமயத்தில் திமுகவின் ஆதரவாளராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த்தை எல்லாம் மேடைகளிலும் தாக்கித் தர குறைவாக பேசினார். கேப்டனை தண்ணி வண்டி என்றெல்லாம் விமர்சித்த வடிவேலு, அதன் பின்பு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சினிமா வாய்ப்பே இல்லாமல் சும்மாவே இருந்தார்.

கேப்டனை தவறாக பேசியதோடு 24ம் புலிகேசி என்ற படத்தில் வடிவேலு ஒப்பந்தமாகி, அதன் பின் படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தராமல் பல கோடி நஷ்டத்தை விளைவித்ததால் தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் சங்கர் புகார் அளித்தார். அதனால் வடிவேலுக்கு ரெட் கார்ட் கொடுத்து சில வருடம் சினிமாவில் எந்த படத்தையும் நடிக்க விடாமல் செய்தனர். ஆனால் கடந்த 2021ல் இந்த தடையை விலகி மீண்டும் நடிக்க வந்தார், ஆனா அவர் நடித்த எந்த படமும் உருப்படியா ஓடல.

கமல்: ராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் யுத்தமாக எடுக்கப்பட்ட விஸ்வரூபம் 2 படத்தின் கதையை எழுதி இயக்கி தயாரித்த உலகநாயகன் கமலஹாசன், அந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்த திட்டமிட்டார். இதற்கு ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்ப்பு தெரிவித்தது. அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கவும் முடிவெடுத்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். பின்பு நான்கு வருடம் கழித்து தான் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் மறக்க முடியாத இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தார்.

சிம்பு: 80களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின் 2000ம் ஆண்டுகளில் டாப் ஹீரோவாக ரவுண்டு கட்டிய சிம்புவிற்கு 2012ம் ஆண்டிற்கு பிறகு கொஞ்சம் திமிரு ஏறிவிட்டது. இதனால் அவர் கமிட் ஆன படங்களுக்கெல்லாம் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு, கால்சீட் தராமல் இழுத்தடித்தார். ஷூட்டிங்கிற்கு கால தாமதமாக வருவது, வந்தாலும் ஒழுங்காக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.

இது ஒன்றல்ல இரண்டல்ல நிறைய படங்களுக்கு இதையே சிம்பு வழக்கமாக வைத்திருந்ததால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் சில வருடங்கள் அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன் பின் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களின் மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கி இப்போது வாலை சுருட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read: கமல் பட ஹீரோயினுக்கு நடந்த கொடுமை.. நைட்டு எப்ப ஹீரோ கூப்பிட்டாலும் போகணும்

ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட பிரபலங்களின் லிஸ்ட் 

ஜெய்: பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தளபதி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்ட நடிகர் தான் ஜெய். 2000 ஆம் ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த ஜெய், புகழ் போதையில் ஓவராகவே ஆட ஆரம்பித்தார். படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வருவதில்லை, வந்தாலும் கதாநாயகிகளுடன் கடலை போடுவதை தான் வேலையாக வைத்திருந்தார். இதனால் எரிச்சலடைந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்தனர். பின்பு சில வருடம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த ஜெய்-க்கு, இப்போது வெப் சீரிஸ் மற்றும் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 

சின்மயி: கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பாடகி சின்மயி 2018ல் புகார் அளித்தார். யாருமே நம்பாத போது, வைரமுத்து மீது METOO அமைப்பின் மூலம் பல பிரச்சனைகளை முன்வைத்து ரொம்பவே தவறாக பேசியதால், சினிமாக்காரர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனில் இருந்து சின்மயிக்கு ரெக்கார்ட் கொடுக்கப்பட்டது.

அசின்: 2000ம் ஆண்டுகளில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை தான் அசின். அதிலும் கஜினி படத்தில் அசின் கதாநாயகியாகவும், நயன்தாரா செகண்ட் ஹீரோயின் ஆகத்தான் நடித்தார். அந்த அளவிற்கு மார்க்கெட் பிக்கில் இருந்த சமயத்தில் ஹிந்தியில் அடுத்த ஸ்ரீதேவியாக வேண்டும் என்று ஆசைப்பட்டு கிளம்பி போன அசின், கடைசியில் ஒண்ணுமே இல்லாமல் போய்விட்டார். 2011ம் ஆண்டு ‘ரெடி’ என்ற படத்தில் சல்மான் கான் உடன் அசின் நடித்த போது அதன் படப்பிடிப்பிற்காக ஸ்ரீலங்கா சென்றார்.

அந்த சமயத்தில் தான் தமிழ்நாட்டிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் பிரச்சனை இருந்தது. அதனால் ஸ்ரீலங்காவிற்கு சென்று யாரும் நடிக்க கூடாது என சொல்லப்பட்டது. அதை மீறியும் இவர் ஹிந்தி படத்திற்காக ஸ்ரீலங்காவிற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் இனிமேல் தமிழ் சினிமாவில் நடிக்க கூடாது என ரெட் கார்டு கொடுத்து விட்டனர். அதன் பின்பு அசின் சினிமாவிற்கே முழுக்கு போட்டுவிட்டு, மைக்ரோமேக்ஸ் நிறுவனரான ராகுல் சர்மாவை 2016ல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Also Read: அதிக சம்பளம் வாங்கியும் நிம்மதியை தொலைத்த 3 பிரபலங்கள்.. நடிகைகளால் வந்த சாபக்கேடு

Trending News