உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் பணக்காரர்களில் முக்கியமானவர் தான் முகேஷ் அம்பானி. மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் இவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட இவருடைய வீட்டில் தற்போது கல்யாண கொண்டாட்டம் களைக்கட்டி இருக்கிறது. இவருக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற மூன்று வாரிசுகள் இருக்கின்றனர்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற நிச்சயதார்த்தம்

அவர்களில் முதல் இருவருக்கு கல்யாணம் முடிந்த நிலையில் தற்போது அவருடைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. ஏற்கனவே இவருடைய திருமணம் பற்றி பல செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த திருமண நிச்சயதார்த்த போட்டோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஆனந்த் அம்பானி இருவரும் பல வருடங்களாகவே காதலித்து வந்தனர். நியூயார்க்கில் பட்டம் பெற்ற ராதிகா தற்போது என்கோர் ஹெல்த் கேர் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கிறார். அதேபோன்று ஆனந்த் அம்பானியும் வெளிநாட்டில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.
அம்பானி மகனின் நிச்சயதார்த்தம்

தற்போது இவர்களுடைய காதல் பெரியோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு கடந்த மாதம் இவர்களுடைய திருமணம் உறுதிப்படுத்தப்பட்டது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற கோவிலில் இதற்கான விழாவும் அமோகமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது இவர்களுடைய நிச்சயதார்த்தம் அனைவரின் முன்னிலையிலும் சிறப்பாக நடந்தேறியுள்ளது.
அந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு கல்யாண ஜோடியை வாழ்த்தி உள்ளனர். மேலும் இவர்களுடைய திருமண நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இன்னும் சில மாதங்களில் அம்பானி வீட்டு கல்யாணம் அனைவரும் வியக்கும் வகையில் நடக்க இருக்கிறது. அந்த வகையில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்திய நிச்சயதார்த்த விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ட்விட்டர் தளத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
ராதிகா மெர்ச்சன்ட் -ஆனந்த் அம்பானி

மேலும் இவர்களுடைய திருமணத்தில் உலக அளவில் பிரபலமாக இருக்கும் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். அதனாலேயே இந்த நிகழ்வு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.