அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிற்கு வச்சாங்க பெரிய ஆப்பு.. முதல் ஆர்டரில் வசூல் வேட்டை ஆடிய எலான் மஸ்க்

தகவல் பரிமாற்றத்திற்காக பெரிதும் பயன்படும் ட்விட்டர் நிறுவனம், பொதுவாக பிரபலமான நபர்கள் புகழ் பெற்றவர்கள் உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கம், அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் ப்ளூ டிக் வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.

தற்போது ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கின் வசம் வந்த நிலையில், போலியான கணக்குகளை நீக்க அதிகாரப்பூர்வமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அதன்படி ட்விட்டர் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் என்றும் பல அதிரடி நடவடிக்கைகள் கூடிய முதல் ஆர்டரில் வசூல் வேட்டை செய்ய உள்ளார்.

அதாவது ட்விட்டரில் ப்ளூ டிக்காக பயனாளர்கள் மாதம் தோறும் ரூபாய் 410 ரூபாய் (4.99 அமெரிக்க டாலர்கள்) வரை செலுத்த வேண்டியிருந்தது. இதன் மூலம் பயனாளர்கள் ட்விட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கள் பதிவிட்ட பதிவுகளை எடிட் செய்யும் வசதியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக் பயனாளர்களிடம் மாதம் தோறும் ரூபாய் 1600 (19.99 அமெரிக்க டாலர்கள்) வரை கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இந்த அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தவில்லை என்றால் ப்ளூ டிக் பயனாளர்களின் பெயருக்கு அருகில் உள்ள ப்ளூ டிக்கெட் குறியீட்டை பறிக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் கண்டிப்பாக சொல்லப்பட்டுள்ளது.

ஆகையால் ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வ கணக்கிற்காக நான்கு மடங்கு வசூலை உயர்த்தி பெரிய ஆப்பு வச்சிருப்பது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.