Vijay : நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பத்ததிலேருந்து ஒருபக்கம் ஆதரவும் ஒருபக்கம் எதிர்ப்பும் எழுந்து வருகின்றன. விஜய் அவர்கள் பொறுமையாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் அவரை கோபப்படுத்தி பேசவைக்கின்றனர். அவ்வாறு கோபப்பட்டாலும் நிதானம் இழந்து ஏதும் பேசவில்லை விஜய் அவர்கள்.
விஜய் அவர்கள் நன்று பழகிய அரசியல்வாதி போல தெள்ளத்தெளிவாக தன் ஒவ்வொரு அடியயையும் எடுத்து வைக்கிறார். நடிகர் கூட்டத்திலேயே விஜய் அவர்களை எதிர்க்க எதிர்ப்பாளிகள் இருந்துதான் வருகின்றனர். அரசியல்வாதிகளில் சிலர் ஆதரவு கொடுத்தவாறு இருந்து வருகின்றனர். பல அரசியல் கட்சி தலைவர்கள் தன்னுடன் கூட்டணி வைத்துக்கொள்வார் விஜய் என்கிற நோக்கத்தில் சில கருத்துக்களை முன்வைகின்றனர்.
நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் தனியாக பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த போதிலிருந்து வந்த எதிர்ப்புகள் போலத்தான் தற்போதும் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. காரணம் இருவருமே அசைக்கமுடியாத ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்திருப்பது தான். ரசிகர்கள் அனைவரும் தொண்டர்களாக மாறிவிட்டனர் எம் ஜி ஆர் அவர்களுக்கு. அதே பாணியை பின்பற்றுகிறார் விஜய் அவர்கள். இந்த வகையில் விஜய் அவர்களை எதிர்த்து தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்குவார்கள் சில நடிகர்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் நடிகர்கள்..
கமல்ஹாசன் : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் புதிதாக கட்சி ஆரம்பித்து செய்யப்பட்டு வருகிறார். “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவரான இவர் திமுக கூட்டணியில் இருந்து வருகிறார். இவர் 2026 தேர்தல் பிரச்சாரத்தில் “தமிழக வெற்றி கழகத்தை” எதிர்த்து கருத்துக்களை முன்வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரத்குமார் : நடிகர் சரத்குமார் அவர்கள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்து அரசியலில் சிறப்பாக பணியாற்றி வந்தார். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். இவரும் வரவிருக்கும் 2026 தேர்தலில் விஜய் கட்சியை எதிர்த்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாஸ் : நடிகரும் இசையமைப்பாளருமான கருணாஸ் அவர்கள் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவராக இருந்தவர். இவர் திருவாடானா சட்டமன்ற தொகுதியில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டவர். கருணாஸ் அவர்களும் அரசியல் ரீதியாக விஜய் அவர்களை எதிர்த்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவேலு : தமிழ் திரையுலகில் நீங்காத நகைச்சுவை மன்னனாக திகழ்பவர் வடிவேலு அவர்கள். இவர் தற்போது விஜய் அவர்களை எதிர்த்து பல கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அதனால் நிச்சயம் இவர் தேர்தல் காலத்தில் விஜய்க்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீமான் : நடிகரும், இயக்குனருமான சீமான் அவர்களை அரசியல் காலத்தில் அனைவர்க்கும் தெரியும். “நாம் தமிழர் கட்சி ” என்னும் கட்சியை ஆரம்பித்து தற்போது பெரும்படையை திரட்டி வைத்துள்ளார் சீமான். இவரது அரசியல் பயணமும் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து செயல்படுகிற இதுவரை. அதனால் இவர் நிச்சயமாக விஜய் அவர்களை எதிர்த்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது மாற்றமில்லாத ஒன்று.
திவ்யா சத்யராஜ் : இவர் நடிகர் சத்யராஜ் அவர்களின் மகள். இவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். இவருக்கும் அரசியல் மீது மிகுந்த பற்று உண்டு. இவர் அட்சய பாத்திர அறக்கட்டளையின் தூதராக உள்ளார். இவர் தற்போது திமுக கட்சியில் உள்ளார். இவரும் இப்போதிலிருந்தே விஜய்க்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கிறார். அந்த நிலையில் கண்டிப்பாக தேர்தல் பிரசாத்தில் விஜய்க்கு எதிராக களத்தில் திவ்யாசத்யராஜ் அவர்களை பார்க்கலாம்.