அதிமுக படு தோல்விக்கு முக்கியமான 5 காரணங்கள்.. இந்திய அளவில் 3வது பெரும் கட்சிக்கு ஏற்பட்ட மீள முடியாத அடி!

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் நேற்று முடிவுக்கு வந்த சட்டமன்ற தேர்தல். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார் என்ற ஆவலில் இருந்த மக்கள் மத்தியில் நேற்று திமுக அமோக வெற்றி பெற்றது.

ஆனால் இதற்கு முன்னர் ஆட்சி அமைத்த அதிமுக ஏன் வெற்றி பெறவில்லை என கருத்துக் கணிப்பு பார்க்கும் போது அதிமுக குறிப்பிட்ட தவறுகள் செய்ததால் தான் இந்த தடவை அவர்களால் பெரிய அளவு வாக்குகள் சேகரிக்க முடியாமல் தோல்வி அடைந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அமோக வெற்றி பெற்ற அதிமுக இந்த தடவை ஏன் பெருவாரியான இடங்களில் வாக்குகள் பெறாமல் தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

அதிமுகவின் தோல்விக்கான காரணங்கள்

அதிமுகவின் முதல் தோல்விக்கு காரணம் பாஜகவின் கூட்டணி என பலரும் கூறி வருகின்றனர். இதுவே எதிர்க் கட்சிக்கு சாதகமாக அமைந்தது எனவும் பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில்தான் ஸ்டெர்லைட் பிரச்சனை பெரிதாக வெடித்தது. ஆனால் அப்போது எடப்பாடி பழனிச்சாமி இதைப்பற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் ஏனோதானோ என ஒரு சில நடவடிக்கைகள் எடுத்ததால் மக்கள் அதிகமாக அதிமுக கட்சியை விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் மீத்தேன் திட்ட பிரச்சினைக்கும் இவர்கள் எந்த ஒரு சரியான நடவடிக்கை மத்திய அரசை எதிர்த்து எடுக்கவில்லை என்பதால் மக்கள் ஆத்திரத்தில் அதிமுக வெறுத்து ஒதுக்கினர், என்பது முக்கிய காரணமாகவும் அமைந்தது.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த ஆதிமுக பெரிதளவு மக்களுக்கு தொண்டாற்ற வில்லை. அது மட்டுமில்லாமல் கூலி வேலை செய்து வந்தவர்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டும் அதிமுக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமமுக கட்சி அதிமுகவின் முக்கியமான இடங்களில் ஓட்டுகளை பிறித்துவிட்டது. அதனாலும் அதிமுக படுதோல்வி அடைய காரணமாக அமைந்தது. அதையும் தாண்டி ஜெயலலிதா போன்று திறமையான ஆளுமை தலைவர்கள் இல்லாத காரணத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.

ஆனால் மக்களுக்கு தொண்டாற்ற கூடிய ஆட்சியாக அமைந்தால் மட்டுமே எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் நிரந்தர முதல்வராக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.