Youtuber Irfan : பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள பிரபல ஹோட்டல்களில் உணவு ருசித்து வீடியோக்களை பதிவிட்டு வருபவர் தான் யூடியூபர் இர்ஃபான். இவர் சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவ்வாறு தனது மனைவி கருவுற்ற போது கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடியை அவரே கட் செய்தார்.
இதையெல்லாம் காட்டிலும் ஈத் பெருநாளில் தெரு ஓரங்களில் உள்ள மக்களுக்கு பணம் மற்றும் உடை கொடுக்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களை மோசமாக பேசியது இணையத்தில் பூதாகரமாக வெடித்தது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாரா இர்ஃபான்.?
அதன் பிறகு இர்ஃபான் மன்னிப்பு கேட்டிருந்தார். இப்போது என்னவென்றால் பெரிய சிக்கலில் மாட்டி இருக்கிறார். அதாவது சமீபத்தில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி மல்கோத்ரா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார்.
இதை அடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சில யூடியூபர்களும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறப்பட்டது. அதில் யூடியூபர் இர்ஃபான் பெயரும் அடிபடுவதாக கூறப்படுகிறது. அதேபோல் மதன் கௌரி போன்ற சிலர் பேரும் உலாவி வருகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான சில முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக யூடியூபர்கள் இடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் இர்ஃபான், மதன் கௌரி போன்றோர் வெளிநாடுகளில் சென்று வீடியோக்களை எடுத்து தனது யூடியூபில் பதிவிட்டுள்ளனர்.
இதனால் இவர்கள் பெயர்கள் அடிபடுவதால் அவர்களையும் விசாரணை செய்ய வாய்ப்பிருக்கிறது.