வேன் மீது ஏறி குறளி வித்தை காட்டிய ரசிகர்.. பதறிய விஜய், இதுக்கு தான் y பாதுகாப்பு கேட்டாரோ.!

Vijay: விஜய் இன்று தன் கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாட்டிற்காக கோவை சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்திலேயே அவருக்கு பலமான வரவேற்பு கிடைத்தது.

அதை அடுத்து ரோடு ஷோ நடைபெற்றது. திறந்த வேனில் நின்று கொண்டே தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார் விஜய்.

அதில் ஓவர் சந்தோஷமான சில ரசிகர்கள் செய்த அலப்பறை தான் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கிறது. அதாவது அந்த வேனில் ஏறி தளபதி என கத்தியபடி குறளி வித்தை காட்டிய வீடியோக்கள் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இதை எதிர்பார்க்காத விஜய் கூட சில நொடிகள் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு சிரித்தபடி ரசிகர்களை அமைதி படுத்த முயன்றார். ஆனாலும் சேட்டைக்காரர்கள் அடுத்தடுத்து வேனின் மீது ஏறி வித்தை காட்டிக்கொண்டே இருந்தனர்.

இதுக்கு தான் y பாதுகாப்பு கேட்டாரோ.!

இது என்னடா வம்பா போச்சு என பவுன்சர்கள் வேனின் மீது ஏறி அவர்களை இறக்கி விட வேண்டியதாய் போயிற்று. ஒருவேளை இதுக்காகத்தான் விஜய் y பாதுகாப்பு கேட்டிருப்பாரோ என சிலர் நக்கல் அடித்து வருகின்றனர்.

ஆனால் தொண்டர்களும் ரசிகர்களும் இது போன்ற நடந்து கொள்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். என்னதான் ஆர்வம் இருந்தாலும் இப்படி ஒரு கட்சி தலைவரை சங்கடப்படுத்த கூடாது என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.