வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 5 வகை விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்

Traffic Rules : சாலையில் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்காக போக்குவரத்து துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த விதி மீறல்களால் சில அபாயம் ஏற்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க போக்குவரத்து அதிகாரிகள் கும்பலாக நின்று அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து ஐந்து வகை விதிமீறல்களை வெளியிட்டு இதற்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்ற போக்குவரத்து காவல்துறை அறிவித்திருக்கிறது.

முதலாவதாக அதிவேகமாக வாகனத்தில் செல்வது. வரையறுக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக வாகனங்களில் செல்வதால் பெரும்பாலான விபத்துக்கள் நடைபெறுகிறது. இதை தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட ஸ்பீடில் தான் வண்டியை ஒட்டி செல்ல வேண்டும்.

போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள ஐந்து வகை விதிமீறல்கள்

அடுத்ததாக கட்டாய ஹெல்மெட் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆகையால் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. பெரும்பாலான விபத்துகளில் இருந்து உயிர் இழப்புகளை தவிர்க்க ஹெல்மெட் முக்கிய கவசமாக இருக்கிறது.

மூன்றாவதாக நோ-என்ட்ரியில் வாகனங்களை ஓட்டுவது. இந்தப் பாதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என பலகை ஒட்டப்பட்ட பின்பும் அதன் வழியாக சென்றால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நான்காவதாக முக்கிய அறிவிப்பு என்னவென்றால் வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டினால் அபராதம் வசூலிக்கப்படும். மது அருந்திய பின் தன்னிலை மறந்து வாகனத்தை ஓட்டும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது.

ஐந்தாவதாக இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் நபர்கள் பயணித்தால் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த ஐந்து விதிமீறல்களை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டிருக்கிறார்.