Kavin: தமிழகத்தில் தற்போது என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அரசியல் கொலைகள் ஒருபக்கம், ஆணவ படுகொலைகள் ஒரு பக்கம், சிறுமிகள் கற்பழிப்புகள் ஒருபக்கம், லாக்அப் இறப்புகள் ஒரு பக்கம் என தமிழ்நாடு நிலைகுலைந்து பொய் கிடைக்கிறது.
மக்களிடையே மனிதாபிமானம் மறந்து போய்விட்ட்டதா அல்லது சமத்துவம் என்ற சொல் மறைந்து பொய் விட்டதா என்று தெரியவில்லை. இன்னும் அஜித்குமாரின் லாக்அப் இறப்பிலிருந்து மீண்டு வராத நாம். இன்னும் ரிதன்யாவின் வரதட்சணை கொடுமை தற்கொலை பற்றி மீண்டு வராத நாம் தற்போது மீண்டும் அதே சோகத்தில் மூழ்கி போயிருக்க ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ஆமாம் அதுவும் ஆணவ படுகொலை.
நீதியை நிலைநாட்ட உயிர்பலி கேட்கிறதா சமூகம்..
நெல்லையில் தற்போது ஒரு ஆணவ படுகொலை அரங்கேறி இருக்கிறது. கவின் செல்வகணேஷ் மற்றும் அவனுடன் படித்த பெண்ணும் கடந்த எட்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், தற்போது அந்த செய்தி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வர அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர் கவீன் என்பவரை கொலை செய்துள்ளார்.
என்னதான் கவின் செல்வகணேஷ் நன்றாக படித்து நல்ல வேலையில் அமர்ந்திருந்தாலும், லட்சக்கணக்கில் சம்பாதித்து இருந்தாலும், அவரது குடும்பம் பின்னணி நன்றாக இருந்தாலும், இருவரும் சேர்வதற்கு தடையாய் இருந்தது சாதி. அந்தப் பெண் உயர்ந்த ஜாதியாகவும், அந்த பையன் தாழ்ந்த ஜாதியாகவும் இருந்ததே இந்த கொலைக்கு காரணம்.
இந்த கொலையை விட மோசமான ஒரு கருத்து பரவி வருகிறது என்றால் அது அந்தப் பெண் நான் காதலிக்கவில்லை என்று கூறிய பதில் தான். அந்தப் பெண் காதலிக்கவில்லை என்று கூறியவுடன் அந்த பெண்ணை பற்றி அவதூறாகவும் சில கருத்துக்களை முன்வைத்து சமூக வலைத்தளங்கள் செய்திகளை பரப்பி வருகின்றன.
பொதுவாக நாம் இரண்டு பக்கமுள்ள நியாயங்களை பார்த்து தான் ஒரு தீர்வை எழுத வேண்டும். அந்த வகையில் தான் காதலித்து வந்த காதலன் தற்போது இல்லை என தெரிந்த அந்த பெண் தன்னை வளர்த்த பெற்றோரின் கவுரவத்தையாவது காப்பாற்றுவோம் என்று ஒரு பொய் சொல்லி இருக்கலாம், நான் காதலிக்கவில்லை என்று.
இல்லை, தான் காதலித்தவன் தான் போய்விட்டான் அவருடன் சேர்ந்து தான் இருந்த நினைவுகளையாவது நாம் சேர்த்து வைக்க வேண்டும் என்று தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள அந்த பொய்யை கூறினாலோ, இல்லை உடலளவிலும் மனதளவிலும் தனது குடும்பத்தில் பிரச்சனைகளை சந்தித்தாலோ “நான் காதலிக்கவில்லை” என்ற வார்த்தையை கூற.
இல்லை நான் உண்மையாகத்தான் காதலித்தேன் என்பதற்காக அவரது உயிரை கேட்கிறதா? இந்த சமூகம் என்ன எதிர்பார்க்கிறது அவளிடம். அவளிடம் சொல்ல என்ன வார்த்தை இருக்கிறது. நான் கவீனை காதலித்தேன் என்று சொன்னால் இறந்து போன கவீன் எழுந்து வந்து விடுவானா? என்ற கேள்வி அவள் உள்ளே இருக்கலாம் அல்லவா.
நீதியை நிலை நாட்ட அவள் உயிரைக் கேட்கிறதா இந்த சமூகம். தன் காதலையும், தன் காதலனையும் அவளால் காப்பாற்ற முடியவில்லை. வேண்டாம் அவளை விட்டு விடுங்கள், மிச்சமுள்ள அவள் உயிரையாவது அவள் காப்பாற்றிக் கொள்ளட்டும்.
இன்னும் எத்தனை தலைவர்கள் தான் வரவேண்டும் சாதியை ஒழிக்க, இன்னும் எத்தனை தலைவர்கள் தான் வர வேண்டும் உங்கள் மண்டைக்குள் சமத்துவத்தை கற்பிக்க என்று பரவலாக மக்கள் பேசி வருகிறார்களாம்.