அனுபவசாலிகள் இல்லாத கட்சி தேறாது.. ஆமா, நீங்க TVK-வை சொல்லுறீங்களா ரஜினிகாந்த் சார்

Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகத்தில் உச்சத்தில் இருக்கும் ஒரு பிரபல நடிகர். இவர் கைவசம் நிறைய வெற்றி படங்களை வைத்துள்ளார். தற்போது இவருக்கு கூலி படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெரிய வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.

இவர் தற்போது “வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற நாவலன் வெற்றி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சிறப்பித்து கொடுத்திருக்கிறார். இந்த விழாவில் நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்து கொடுத்திருக்கின்றனர்.

அனுபவசாலிகள் இல்லாத கட்சி தேறாது..

இதில் ரஜினிகாந்த் அவர்கள் பல சுவாரஷ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இதில் இவர் அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது என்று கூறியுள்ளார். அனுபசாலிகள் தூண்கள் மட்டுமல்ல, சிகரங்கள் கூட என்று கூறியுள்ளார்.

இந்தக்கருத்து நன்றாக இருந்தாலும், ரஜினிகாந்த் அவர்கள் ஏற்கனவே அரசியலுக்கு வருவதாக இருந்த இலையில் பிறகு அந்த முடிவு கைவிடப்பட்டது. தற்போது நடிகர் விஜய் அவர்கள் தனக்கென ஒரு கட்சி ஆரம்பித்து அதற்கான வேலைகளை பரபரப்பாக செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கூறியுள்ள கருத்து க்களை இல்லை என்றால் எந்த இயக்கமும் எந்த கட்சியும் தேராது என்று ஒரு கருத்தை கூறி இருப்பது சற்று சர்ச்சையை கிளப்பும் விதமாகவே உள்ளது. அப்போ ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் விஜய் அவர்களை தான் கூறியுள்ளாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆனால் அனுபவம் என்பது என்றுமே வெளியில் இருந்து பார்க்கும்போது கிடைக்காது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அனுபவம் என்பது ஒரு செயலை களத்தில் இறங்கி அதை செய்யும் போது வெற்றியில் இருந்தும், தோல்வியிலிருந்தும் கற்றுக் கொள்ளும் பாடமே சிறந்த அனுபவமாக கருதப்படுகிறது.

இவ்வாறு பார்க்க போனால் நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்து களத்தில் இறங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதனால் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் அவர்களை குறிப்பிட்டு இந்த கருத்தை முன் வைக்கவில்லை என்பது எந்த சந்தேகமும் இல்லாமல் தெளிவாக புரிகிறது.