தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) புதிய கட்டத்தில் இன்று பெரும் முன்னேற்றம் கண்டது. ‘My TVK’ என்ற புதிய செயலியை வெளியிட்ட அவர், இது கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்தும் ஒரு முக்கிய சாதனமாக இருக்கும் என்று அறிவித்தார். பனையூரில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த செயலியின் அறிமுகம் நடைபெற்றது.
இந்த செயலியின் முக்கிய நோக்கம், இரண்டு கோடி குடும்பங்களை தவெக உறுப்பினராக பதிவு செய்வது. ஒவ்வொரு தொகுதியின் வாக்காளர் பட்டியல் இதில் இணைக்கப்பட்டுள்ளதால், நிர்வாகிகள் நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கையை எளிதாகச் செய்ய முடியும். இது, களத்தில் பணியாற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
My TVK செயலியின் உருவான பின்னணி
ஆனால், இந்த செயலியை உருவாக்கிய நிறுவனம் குறித்து சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. Samasthan Infotech Private Limited என்ற நிறுவனம் My TVK செயலியை வடிவமைத்துள்ளது என்பது பதிவு செய்யப்பட்ட தகவல். இந்த நிறுவனம் பிஜேபி-யுடன் தொடர்புடையது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஜக உறுப்பினரான சுப்ரமணியம் முத்துசாமி, இந்த Samasthan நிறுவத்தின் உரிமையாளராக இருப்பது தற்போதைய சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. இவர் கடந்த 2011 மற்றும் 2015 ஆகிய தேர்தல்களில் பிஜேபி சார்பாக வேட்பாளராக போட்டியிட்டவரென்பதும் தற்போது வெளியானது. இதன் அடிப்படையில், விஜயின் தவெக மற்றும் பிஜேபி இடையே ஏதேனும் வெளிப்படாத இணைப்பு உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில், மக்களிடையே “விஜய் பிஜேபியின் கூட்டுக்களவாணி,” என்ற சந்தேகம் எழுந்துள்ளது. My TVK செயலி ஒரு கட்சியின் வளர்ச்சிக்கான முயற்சியாக அறிமுகமாகியுள்ளது என்றாலும், அதன் பின்னணியில் இருப்பது யார் என்பதற்கான விவாதம் பெருகியுள்ள நிலையில், இது கட்சியின் நம்பகத்தன்மைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இதற்கான தெளிவான விளக்கம் வழங்கப்படாததால், தவெக மீது மக்களிடையே நிழலாக சந்தேகம் நிலவும் அபாயம் இருக்கிறது.