தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீமான்.. ஓட்டு விழுந்ததே விஜய்யாலதான், வன்மத்தை கக்காதீங்க, உடைத்து பேசிய பிரபலம்

Seeman : “நாம் தமிழர் கட்சி ” தலைவராகிய சீமான் அவர்கள் தனக்கென ஒரு கட்சியை ஆரம்பித்து பல வருடங்களாக தனித்துப் போட்டியிட்டு தமிழகத்தை ஆள வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் ஒரு தலைவர். இவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இந்நாள் வரை யாரிடமும் கூட்டணி போடாமல், தனித்து நின்று அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வரும் ஒரு அரசியல்வாதி.

இவருக்கு இரண்டு முகம் உள்ளது பொதுவாக அதை விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன், விஜய் அரசியலுக்கு வந்ததற்குப் பின் என பிரிக்கலாம். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் ஏன் அரசியலுக்கு வந்ததற்கு அப்புறமும் கூட தம்பி தம்பி என்று அன்போடு அழைக்கும் சீமான்.

சில நாட்களுக்கு முன்பு வரையில் விஜய் அவர்களை விட்டுக் கொடுக்காமல் நாசுக்காக பேசிக் கொண்டிருந்த சீமான். தற்போது மு.க. முத்து இறந்த இரங்கலை விசாரிப்பதற்காக ஸ்டாலினை சந்தித்த பிறகு இவருடைய உண்மை முகம் வெளிவந்ததா என்று கேட்கும் அளவிற்கு நடந்து கொள்கிறார்.

தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீமான்..

இல்லை அந்த சந்திப்பின்போது நாமெல்லாம் மூத்த கட்சிகள் நமக்குள் போட்டி இருந்தால் பரவாயில்லை முளைத்துக் கொண்டிருக்கும் கட்சி எல்லாம் வளர விடக்கூடாது என்று பேசி இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை. அந்த சந்திப்பின் பிறகு சீமான், விஜய் அவர்களை கடுமையான வார்த்தைகளைக் கொண்டு தாக்கி வருகிறார். ஆனால் சீமான் அவர்களை பற்றி விஜய் அவர்கள் எந்த ஒரு கருத்தையும் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பின் தம்பி என்று அன்போடு அழைத்தார் சீமான். என் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கூட விஜய்யும் சீமானும் சில விஷயங்கள் சில சமூக பிரச்சனைகளை இணைந்து முன்னெடுத்துவத்தை வைத்ததெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். விஜய்யின் பட ரிலீஸ் கூட சீமான் அவர்கள் ஆதரவாகத்தான் இருந்திருக்கிறார்.

இவ்வளவு வன்மத்தை ஏன் கக்க வேண்டும். தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை என்ற ஆதங்கமா? அல்லது வரவர விஜய் அவர்களின் கட்சிக்கு தன் கட்சியை விட முன்னுரிமை கிடைப்பதால் வரும் பொறாமையா? நீங்களும் சினிமா பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்த ஒரு நபர் தானே என தற்போது அளித்த நேர்காணல் ஒன்றில் வலைப்பேச்சு அந்தணன் அவர்கள் கூறியுள்ளார்.

மேற்கண்ட அனைத்தையுமே வலைப்பேச்சு அந்தணன் அவர்கள் தற்போது அடித்த நேர்காணல் ஒன்றில் சீமான் மற்றும் விஜய்க்கு இடையேயான ஒற்றுமைகள். தற்போது சீமான் நடந்து கொண்ட விதம் என அனைத்தையுமே வெளிச்சம் போட்டு , தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்ள பேசிக் கொண்டிருக்கிறீர்களா என்றவாறு வலைப்பேச்சு அந்தணன் அவர்கள் கூறியுள்ளார்.

சீமானுக்கு ஓட்டு விழுந்ததே விஜய்யாலதான்..

இது மட்டுமல்லாமல் விஜய்யின் “GOAT” படத்தில் பிரபலமாக பேசப்பட்ட மைக் சீன் சீமான் அவர்களுக்கு நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பாலான வாக்குகளை பெற்று தந்தது என்றும் அந்த வாக்குகள் பெற்றதற்கு காரணமே விஜய் அவர்கள் தான் என்றுமே குறிப்பிட்டுள்ளார் வலைப்பேச்சு அந்தணன். அது மட்டுமல்லாமல் எத்தனையோ கட்சிகள் எழுந்து வளர முடியாமல் காணாமல் போய்விட்டன. அதுபோல் தாங்களும் நடந்து கொள்ளாதீர்கள் என்றும் நல்லெண்ணத்துடன் கூறியுள்ளார்.