தமிழ் சினிமாவில் கைவசம் ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் குறித்து எந்த தகவல் வெளியானாலும் உடனே அதை இணையத்தில் டிரண்டாக்கி விடுவார்கள்.
விஜய்யின் புதிய படம் குறித்த அறிவிப்பு அல்லது படத்தின் பர்ஸ்ட் லுக் என எது வந்தாலும் அன்றைய தினம் ட்விட்டரில் விஜய் தான் முதலிடத்தில் இருப்பார். அந்த அளவிற்கு ரசிகர்கள் விஜய்யை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
1996-இல் சென்னை மேயராக இருக்கும் போது 100 மூட்டை அரிசி கொடுத்துள்ளார் தளபதி விஜய் அப்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தற்போது அரசியல் களத்தில் திமுகவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது விஜய்யின் TVK கட்சி. அடுத்த வருட பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளிவர உள்ளது. இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆனால் ஆளும் கட்சி இதனை சுமூகமாக வெளியிட விடுவார்களா என்பது கேள்விக்குறி தான்.