விஜய்யை எதிர்த்து நிற்க.. டாப் நடிகரை தூண்டிவிடும் பெரியகட்சி

Vijay : விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறி “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை ஆர்மபித்தார். இவர் கட்சியை ஆரம்பித்தபோது இவரை பெரும் பொருட்டாக யாரும் பார்க்கவில்லை. நடிகர்கள் கட்சி ஆரம்பித்து பின்பு காணாமல் போவது அரசியலில் சாதாரணம் தானே.

இவ்வாறு எண்ணிக்கொண்டு எந்த கட்சியும் விஜய் அரசியலை கண்டுகொள்ளவில்லை. பிறகு இவர் செய்யும் செயல், பேசும் விதம் அனைத்துமே இவருக்கான அடையாளத்தை தேடித்தந்தது. இவ்வாறு இன்று தமிழ்நாட்டில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்து நிற்கிறது “தமிழக வெற்றி கழகம்”.

டாப் நடிகரை தூண்டிவிடும் பெரியக்கட்சி..

தற்போது இவர் இரண்டாவது மாநாட்டை நோக்கி செயலில் தீவிரமாக உள்ளார். இந்த மாநாட்டை எப்படியாவது தடுக்க வேண்டும் என எதிர்ப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். என்னதான் எதிர்த்து நின்றாலும் மாநாடு நடக்கத்தான் போகிறது என்று அந்த முடிவை கைவிட்டுவிட்டனர் போல.

தற்போது தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே உள்ள நிலையில், தற்போது அந்த பெரிய கட்சி பெரிய பெரிய திட்டம்லாம் தீட்டி வருகிறது. விஜய் போன்ற பெரிய நடிகரை எதிர்க்க வேண்டும் என்றால் அதற்கு போட்டியாக ஒரு நடிகரை தேர்வு செய்யவேண்டும் என எண்ணி, தற்போது சூர்யாவை களமிறக்க போவதாக முடிவு செய்துள்ளதாம்.

கமல் ஏற்கனவே பெரிய கட்சியில்தான் உள்ளார். ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை. ஆகையால் சூர்யாவை தேர்வு செய்துள்ளார்களாம். விஜய் எவ்வாறு மாணவர்களை குறிவைத்து தனது அரசியலை கட்டமைத்தாரோ? அதை உடைக்க திட்டமிட்டு சூர்யாவையும், சூர்யாவின் அறக்கட்டளையும் பயன்படுத்தி விஜய் செல்வாக்கை உடைத்து விடலாம் என முடிவு செய்துள்ளதாம் அந்த பெரிய கட்சி.

இதனால் தான் தற்போது அகரம் அறக்கட்டளையில் படித்த மாணவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தி மார்கெட்டை உருவாக்கலாம் என திட்டம் தீட்டி, நடந்துதான் அந்த விழா! எனவும் பேசிக்கொள்கிறார்கள். இதெல்லாம் உண்மையா என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரிய வரும்.