பலரையும் வியக்க வைக்கும் வகையில் புதுப்புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தி வரும் சுந்தர் பிச்சை பல இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக இருக்கிறார். நமக்கு ஏதாவது ஒரு சந்தேகம் என்றால் உடனே கூகுள் ஆண்டவரை தேடி சென்று விடுவோம். அந்த அளவுக்கு அதில் நமக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைத்து விடும்.
இவ்வாறு தனக்கென ஒரு சாம்ராஜ்யத்துடன் இருந்த கூகுளை ஒழித்து கட்டும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் ChatGPT. இது கூகுளுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதை ஓரம் கட்டியே தீர வேண்டும் என்று சுந்தர் பிச்சை பல முயற்சிகளை மேற்கொண்டார்.
அதன்படி தற்போது இதற்கு சரியான ஒரு போட்டியாளரை அவர் களம் இறக்கியுள்ளார். அதன்படி சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தியுள்ள இந்த பார்ட் (Bard) தொழில்நுட்பம் அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அது 180 நாடுகளில் இலவசமாக கிடைக்கும் படியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி இப்போது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதை ஆங்கிலம், ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளில் நாம் பயன்படுத்த முடியும். மேலும் விரைவில் 40க்கும் மேற்பட்ட மொழிகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு நமக்கு தேவையான தகவல்களை கண் சிமிட்டும் நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் இந்த தளத்தை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளும் இப்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் விரைவில் நமக்கு தேவையான தகவல்களை பல வழிகளிலும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இத்தளம் தற்போது பலருக்கும் உபயோகப்படும் வகையில் இருப்பதால் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் கூகுளுக்கு ஆட்டம் காட்டி வந்த ChatGPT-யின் ஆட்டம் முடிந்தது எனவும் இதன் மூலம் சுந்தர் பிச்சை கெத்து காட்டிவிட்டார் எனவும் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பரவிக் கொண்டிருக்கிறது.