மாநாட்டில் கூட்டணியை உறுதி செய்யும் விஜய்.. ஆட்டம் காணும் பெரிய தலக்கட்டு

Vijay : “தமிழக வெற்றி கழகத்தின்” தலைவர் விஜய் தனது கட்சி எதிர்கொள்ள போகும் முதல் தேர்தல் என்பதால் தேர்தல் களத்தில் இப்போதிலிருந்து செயல்பட ஆரம்பித்து விட்டனர். தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக முடிக்க விஜய் தற்போது இரண்டாவது மாநாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் உறுப்பினர் சேர்க்கை, கட்சி கட்டமைப்பு, கட்சியின் சின்னத்தை தேர்வு செய்தல் என அனைத்து பக்கத்தில் இருந்தும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் விஜய்.

அப்போது “தமிழக வெற்றி கழகத்தை” பற்றி செய்திகளும் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. விஜய் அவர்களை சில கட்சிகள் நேரடியாகவே சிவப்பு கம்பளம் வைத்து கூட்டணிக்கு அழைத்தபோதும் தன் யாருடனும் கூட்டணி வைப்பதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார் விஜய்.

மாநாட்டில் கூட்டணியை உறுதி செய்யும் விஜய்..

ஆனால் கட்சி ஆரம்பித்து தனது இரண்டாவது மாண்டு தற்போது மதுரையில் வைக்க திட்டம் தீட்டியுள்ளார். இந்த மனதில் கூட்டணி அமையும் என கண்டிப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் யாருடன் கூட்டணி என்றுதான் தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த தருவாயில் மதுரை மாநாட்டிற்கு ராகுல்காந்தி அவர்கள் வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராகுல்காந்தி அவர்கள் மத்திய அரசாங்கம், விஜய் ராகுல்காந்தியை நேரிடையாக அழைத்திருப்பது, இங்கு மாநிலத்தில் உள்ள பெரிய பெரிய தலகட்டுக்கு ஆட்டம் காண போகிறது என்றெல்லாம் பேசிக்கொள்கிறர்கள்.

ஆமாம் ஒருவேளை ராகுல்காந்தி அவர்கள் விஜய் கூட கூட்டணி வைத்துக்கொண்டால் திமுக ஆட்சி கலைக்கப்படும். அதனால் விஜய் அவர்கள் நேரடியாக ராகுல் காந்தி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு கூட்டணி வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுகின்றன.

இன்னொரு பக்கம் விஜய் அவர்கள் தேமுதிக மற்றும் ராகுல் காந்தி அவர்களுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் ஒரு தகவல்கள் கசிந்து வருகிறது. இவ்வாறு விஜய் தேமுதிக மற்றும் ராகுல் காந்தி அவர்களுடன் இணைந்து கூட்டணி வைத்துக் கொண்டால் 2026 தேர்தல் களத்தில் வெற்றியை சந்திக்க போவதில் எந்த மாற்றமும் இல்லை.

என்ன நடக்கப் போகிறது என்று மதுரை மாநாட்டில் பொறுத்திருந்து பார்க்கலாம். எழுந்து வரும் புறளிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய், அல்லது புரளியல்ல உண்மைதான் என்று நிரூபிக்க போகிறாரா?