Vijay : நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என் முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் திடீரெனெ தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். அவர் அரசியல் பயணத்தை ஆரம்பித்தவுடன் அவருக்கு எதிராக எத்தனை சிக்கல்கள்.
அது எல்லாத்தையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன லட்சியத்தை நோக்கி பயணத்தை தொடர்கிறார் விஜய். சில எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தாலும். எண்ணிலடங்கா நேர்மறையான கருத்துக்களும் எழுந்துதான் வருகின்றன.
இதைப்பற்றி தற்போது இயக்குனர் லிங்குசாமி அளித்த பேட்டி ஒன்றில் விஜய் அவர்களின் அரசியல் பற்றி வாய் திறந்துள்ளார். அதாவது இவர் உணர்ச்சிவசமாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
Open Talk கொடுத்த பிரபலம்..
சிலர் ரஜினிகாந்த அவர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லாருக்கும் என நினைத்தார்கள் ஆனால் வரவில்லை. அதே போல் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் அவர்களை நாம் தவறவிட்டுவிட்டோம். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்து விட்டு சென்று விட்டார்.
ஆனால் இப்போது விஜய் அவர்கள் நம் மனதில் ரஜினி, விஜகாந்த்திற்கு பதிலாக விஜய் அவர்களை நாம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதில் விதித்துள்ளார் என்றே கூறலாம்.
எதிர்ச்சியாக நான் விஜய்யை சந்திக்கும் தருணம் கிடைத்தது. அப்ப்போது நன் விஜய் அவர்களுடன் சில விஷயங்களை பேசி தெளிவு படுத்தி கொண்டேன்.இவரது திட்டங்களும் அனைத்துமே சூப்பர், சூப்பர் என பாராட்டியுள்ளார் லிங்குசாமி. ஆனால் பேசிக்கொண்ட அனைத்தையும் வெளியில் சொல்லவில்லை.
இவ்வாறு விஜய் வரவேண்டும் என்பதை நேரிடையாகவே கூறியுள்ளார் லிங்குசாமி. அதுமட்டுமல்லாமல் அனைத்தையுமே காலமும் சூழ்நிலையும் தான் முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார். பெரும்பலான மக்கள் மனதில் விஜய் அவர்கள் முதலமைச்சர் ஆனால் தமிழ்நாட்டின் நிலைமை சற்று உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.