ரஜினி சின்னத்தை குறிவைக்கும் TVK விஜய்.? பாஷா பாய் லக்கு தளபதிக்கு கிளிக் ஆகுமா!

Vijay : நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதற்கான வேலைகளை பரபரப்பாக பார்த்துக்கொண்டு வருகிறார். இது ஒருபக்கம் இருக்க அவரது கடைசி பட படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் நடிகர் விஜய் அவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த வகையில் தற்போது எதிர்நோக்கி வரும் 2026-ம் ஆண்டு தேர்தலுக்கான வேலையும் விறுவிறுப்புடன் நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே இருந்து கொண்டிருந்த அரசியல் களத்தில் மேலும் ஒரு திருப்பமாக, நடிகர் விஜய் ஆரம்பித்த கட்சி விறுவிறுப்பு குறையாமல் அரசியலை பற்றி அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இவ்வாறு இருக்க எல்லாம் சரி எந்த சின்னத்தில் விஜய் அவர்களின் கட்சி போட்டியிடப்போகிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்து வந்த நிலையில் அதற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்திலும் விண்ணப்பிக்க தமிழக வெற்றி கழகம் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. ஏனெனில் திமுக ஒரு பக்கம், அதிமுக ஒரு பக்கம் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிடப் போகின்றன.

இன்னொரு பக்கம் தமிழக வெற்றி கழகமும் போட்டியிடப் போகிறது. எனவே 2026 சட்டமன்ற தேர்தல் அனைவரும் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது. அதுவும் கட்சி ஆரம்பித்து வருகின்ற முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் சட்டமன்ற தேர்தலிலேயே எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் அனைத்து முயற்சிகளும் தீவிரமாக செய்து வருகின்றனர்.அதுவும் கட்சி கட்டமைப்பில் மிக தீவிரமாக இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் அவர்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் கட்சி கட்டமைப்பு என்பது மிக முக்கியம் என்பதை புரிந்து கொண்டு செயலாற்றி வருகிறார்.

ரஜினிக்கு அடுத்து ஆட்டோ சின்னத்தை குறிவைக்கும் விஜய்

தற்போது அடுத்தகட்டமாக கட்சியின் சின்னத்தை தேர்வு செய்ய தீவிரம் காட்டியுள்ளது தவெக அணி. மக்களுக்கு ஏற்கனவே பழகிப்போன இரு சின்னங்கள் உதயசூரியன் மற்றும் இரட்டை இலை அதற்கு நிகராக ஒரு சின்னத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று முழு முயற்சியுடன் இறங்கி உள்ளது தவெக அணி.

நட்சத்திரம், அகல்விளக்கு, ஆட்டோ என சின்னம் தேர்வு செய்யப்பட்டதாகவும். அதில் “ஆட்டோ” விருப்ப சின்னமாக தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை நவம்பர் மாதம் தேர்தல் ஆணையத்தில் ஆட்டோ சின்னத்திற்காக விண்ணப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் வேட்டைக்காரன் படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஆட்டோக்காரனாக இருப்பதால் இந்த சின்னம் அனைவரின் மனதிலும் சீக்கிரம் சென்றடையும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்திருந்த போது ஆட்டோ சின்னம் தான் எடுக்க போகிறார் என பேசப்பட்டதாகவும் கூறிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.