விஜய்தான் அடுத்த எம்.ஜி.ஆர் எனக்கூறியதால் வந்த வினை.. ஊரை காலி பண்ண சொன்னா ஜெயலலிதா

Vijay : நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே பெரிய போர்க்களமாக மாறிவிட்டது அரசியல் களம். அரசியல் செய்திகளுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லாமல் அடுத்தடுத்து நிறைய அப்டேட்டுகள் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வந்து கொண்டிருக்கின்றன.

விஜய் அவர்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களும், விமர்சனங்களும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் எழுந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், அதேசமயம் நிறைய நேர்மறையான கருத்துக்களும் எழுந்து தான் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு இருக்க நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு 2000 கைதிகளுக்கு 4 லட்சம் செலவில் பிரியாணி சாப்பாடு ரெடி பண்ணி கொடுத்து இருக்கிறார். இதை, அந்த ஜெயிலில் அப்போதைய பொறுப்பிலிருந்த டி ஐ ஜி ராமச்சந்திரன் புகழாரம் சூடி இருக்கிறார்.

அதாவது இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது என்பது போல தான் தர்மம் செய்ய வேண்டும் அதற்கேற்றார் போல செய்பவர் எம்ஜிஆர். அதற்கடுத்து அதே பாணியில் தான் சேமித்த பொருளை தான் மட்டும் வைத்துக் கொள்ளாமல் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்து வருகிறார் விஜய் அவர்கள்.

அதனால் டி ஐ ஜி ராமச்சந்திரன் நடிப்பில் புகழின் உச்சிக்கே சென்று விடுவார் விஜய் என்பதை , அடுத்த எம் ஜி ஆர் என புகழ்ந்துள்ளார். இதை மறுநாள் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளிவந்திருக்கிறது.

ஊரை விட்டு கிளப்பி விட்டார்கள்

அதாவது விஜய் கைதிகளுக்கு உணவளிக்கும் போது , நடிகர் விஜய் அருகில் டி ஐ ஜி ராமச்சந்திரன் இருப்பது போன்ற புகைப்படங்களை பத்திரிகைதாரர்கள் வெளியிட்டு இதைப் பற்றிய செய்திகளையும் பரப்பியிருக்கின்றனர்.

இது அப்போதுள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அனைவருமே பேசப்பட்ட ஒரு செய்தியாக இருந்ததாகவும். செய்தி வெளிவந்த அன்று ஆளுங்கட்சிக்கு முக்கியமான நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை அறிந்த அப்போது ஆட்சி நடத்திக் கொண்டிருந்த ஆளுங்கட்சி அரசியல் உடனே விரைந்து யாரைக் கேட்டு கைதிகளுக்கு உணவளித்தார்கள் யாரிடமும் அனுமதி கேட்கவில்லை என்றும்.

டி ஐ ஜி ராமச்சந்திரன் விஜயை புகழ்ந்தது பொறுக்க முடியாமல் டி ஐ ஜி ராமச்சந்திரன் அவர்களை அடுத்த இரண்டு நாட்கள் கழித்து கடலூருக்கு பணி மாற்றமும் செய்திருக்கிறார்கள்.

இந்த நெகிழ்வான தருணத்தை ஓய்வுபெற்ற டி ஐ ஜி ராமச்சந்திரன் அவருடைய காணொளி ஒன்றில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதுபோல் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அடுத்தவர்களுக்கு நல்லது செய்து கொண்டு வெளியே தெரியாமல் இருந்து வந்தார். அவருக்கு அடுத்து இந்த காலகட்டத்தில் வெளியே தெரியாமல் அடுத்தவருக்கு நல்லது செய்து வருகிறார் விஜய் என புகழாரம் சூட்டியுள்ளார்.