Vijay : நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்து விஜயின் ரசிகர்களுக்கு திருவிழாதான். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார் விஜய். விஜய் எதிர்பாளர்கள் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற பீதியிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார் விஜய்.
அரசியல் யுக்திகளை பல ஏற்கனவே கற்று தேர்ச்சியடைந்தவர் போல மிகவும் தெளிவாக செயல்படுகிறார் என்ற பேராயும் எடுத்து விட்டார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் விஜய் மாநாடு மாற்றிய பேச்சுக்கள்தான் பேசப்பட்டு வருகிறது.
இவர் தனது முதல் மாநாட்டிலேயே நினைத்ததை விட கூட்டம் அலைமோதி இவரை திக்குமுக்காட வைத்து விட்டது. மக்கள் நம்மை கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் வளர்த்து விட்டார்கள்,
தற்போது ஜனநாயகன் படம் எடுத்து முடித்த கையேடு நம் தளபதி அரசியல் காலத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார். இவரது இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்த போவதாக அப்டேட் கொடுத்த மதுரை மக்களை மகிழ்ச்சியில் தள்ளியுள்ளார்.
இவரை மாநாடு நடத்த குறித்திருந்த தேதி நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் என்பது விஜயகாந்த் தொண்டர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி, இவராகாது கூட்டணி இருக்குமோ என்ற எண்ணத்தையும் தூண்டிவிட்டார் விஜய்.
இத்தனை லட்சம் பேரை எதிர்பார்க்கிறாங்களாம், மாஸ் காட்டும் விஜய்..
தற்போது மேலும் ஒரு தகவல் என்னவென்றால் இரண்டாவது மாநாட்டிற்கு 50 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதாம். சொல்ல முடியாது, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமலே முதல் மாநாட்டிற்கு 15 லட்சத்தில் தாண்டி மக்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் விஜய் ஒரு தெளிவான அரசியல்வாதி என்று புரிதலோடு மக்கள் இருக்கிறார்கள்.
மதுரையில் சித்திரை திருவிழாதான் மக்கள் வெள்ளத்தில் மிதப்பார்கள். ஆனால் விஜய் மாநாடு நடைபெறுவதையும் மக்கள் திருவிழாவாக கொண்டாட போகிறார்கள் போல. பொறுத்திருந்து பார்க்கலாம்.