TVK-வின் திட்டம்.. விஸ்வரூபம் எடுக்க போகும் விஜய்

Vijay : விஜய் வருகின்ற 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடப் போகிறார். அவருடைய சினிமா கேரியருக்கு மொத்தமாக பூசணிக்காய் உடைத்து விட்டு தான் அரசியலுக்கு வருகிறார்.

இதில் என்னவென்றால் அரசியல் வல்லுனர்கள் பலரிடம் ஆலோசனை கேட்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வருகிறார். அவ்வாறு தவெகாவின் திட்டம் அடுத்து என்ன என்பது வெளியாகி இருக்கிறது. அதாவது பூத் கமிட்டி அமைக்க உள்ளார்களாம்.

பொதுவாகவே அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவார்கள். இதனால் தேர்தலில் எந்த முறைகேடுகளும் நடக்கக்கூடாது என்பதற்காக தங்களது வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்டுகளை நியமிப்பார்கள்.

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் போடும் புதிய திட்டம்

இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பூத் ஏஜெண்டை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. இதில் சில நடைமுறைகளையும் வகுத்துள்ளது. திமுக, அதிமுக போன்ற கட்சியினர் பூத் ஏஜெண்டுகளை வைத்து சில வேலைகளை செய்து வருகின்றனர்.

இப்போது தவெகாவும் பூத் ஏஜெண்டுகளை நியமிக்க இருக்கிறார்களாம். இதற்கு அடுத்த கட்டமாக வீட்டுக்கு ஒரு தவெக்காக தொண்டனை உருவாக்க இருக்கின்றனர். இதன் மூலம் குடும்ப ஓட்டுகளை தங்கள் கைவசம் மாற்ற எண்ணி இருக்கின்றனர்.

இது எப்படி சாத்தியம் என்று பலரும் யோசிக்கலாம். ஆனால் வருகின்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் இந்த வரலாற்றை காணலாம் என பலரும் கூறி வருகிறார்கள். விஜய்யும் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆயத்தமாகி வருகிறார்.