விஜய் மட்டும்தான் டார்கெட்டா? திரிஷா ஆடும் கேம், இதெல்லாம் அடுத்த ஜெ-ஆக தீட்டும் திட்டமா?

Vijay : நடிகர் விஜய் தற்போது எல்லாம் சினிமா, அரசியல் மட்டும் அல்லாமல் கிசுகிசுக்களில் கூட முதலிடத்தில் உள்ளார். அதுவும் நிறைய நடிகைகளோடு கிடையாது ஒரே ஒரு நடிகையோடு மட்டும் அடிக்கடி கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்.

நடிகர் விஜய்க்கு நடிகை திரிஷாவுக்கு இடையில் சொல்ல முடியாத உறவு ஒன்று உள்ளது என சமூக வலைத்தளங்களை அடிக்கடி புகைப்படங்களும், பேச்சுகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இன்றளவில் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

தற்போது சூர்யா அவர்களின் பிறந்தநாள் முடிந்த நிலையில், சூர்யா நடித்து வெளிவர எடுக்கும் “கருப்பு” படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. இந்த நடிகை திரிஷா விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

தற்போது வெளிவரவிற்கும் “கருப்பு” படத்தில் த்ரிஷா தான் நடிகையாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை திரிஷா ஏன் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் மட்டும்தான் டார்கெட்டா..

அப்போ த்ரிஷாவின் டார்கெட் விஜய் தானா? என்ற கேள்வியை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள் மக்கள். சினிமாவில் நடித்ததை விட விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பிறகு தான் இந்த செய்தி மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே திரிஷா ஒரு நேர்காணலில் தனக்கு முதலமைச்சர் ஆக ஆசை இருக்கிறது என கூறியிருப்பது வைரலாக போய்க்கொண்டிருந்த நிலையில், இவர் முதலமைச்சர் ஆகும் ஐடியாவில் தான் விஜய் கூட நெருக்கமாக பழகி வருகிறாரா என்றும் அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.

அடுத்த ஜெ-ஆக தீட்டும் திட்டமா..

இதையெல்லாம் நம்புற மாதிரியாக இல்லை என்று ஒரு பக்கம் கூறினாலும், தற்போது இணைந்து நடித்திருக்கும் சூர்யாவிற்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆனால் விஜய்க்கு மட்டும் வாழ்த்து கூறியுள்ளார் என்பது எதார்த்தமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அடுத்த ஜெயலலிதாவாக திட்டம் தீட்டுகிறாரோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது.