வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லோகேஷ் கூப்பிட்டும் நடிக்க மறுத்த ஸ்டைலிஷ் வில்லன்.. தளபதி 67 கொடுக்கப் போகும் மாஸ் என்ட்ரி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான விக்ரம் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

பெரும்பாலான படங்களில் ஹீரோக்களுக்கு மட்டும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் விக்ரம் படத்தில் எல்லோருக்குமே சமமான கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார் லோகேஷ். அதனால்தான் எல்லா கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

Also Read :கமலுக்கு ஒரே படத்தில் 100 கோடி சம்பாதிச்சு கொடுப்பேன்.. லோகேஷ் கூறிய ஷாக்கான காரணம்

இதில் செம்பன் வினோத் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் பிரபல இயக்குனர் ஒருவர் நடிப்பதாக இருந்தது. அதாவது விக்ரம் படத்தில் செம்பன் வினோத் மலையாளம், தமிழ் சேர்த்து பேசி இருப்பார். இந்த இரண்டு பாசைகளும் நன்கு தெரிந்தவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

அதுமட்டுமின்றி ஏற்கனவே போலீஸ் கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்துள்ளார். இதனால் லோகேஷ் இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் கௌதம் மேனனை நாடி உள்ளார். ஆனால் அப்போது கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு பட வேலையில் பிஸியாக இருந்துள்ளார்.

Also Read :கோடிகளில் சம்பளம் வாங்கியும் பிரயோஜனமில்லை.. கௌதம் மேனன் கடனை வைத்து விளையாடும் தயாரிப்பாளர்

மேலும் கமலஹாசன் உடன் ஒரே திரையில் நடிக்க வேண்டும் என்பது கௌதம் மேனனின் ஆசை. ஏற்கனவே கமலின் வேட்டையாடு விளையாடு படத்தை கௌதமேனன் இயக்கியிருந்தார். ஆனால் கால்சூட் பிரச்சனை காரணமாக விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதமேனன் கூறினார்.

தற்போது லோகேஷ் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் கௌதம் மேனனுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் விஜய்யுடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்ற கௌதம் மேனனின் ஆசை தளபதி 67 படத்தின் மூலம் நிறைவேற உள்ளது.

Also Read :அவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும்.. விஜய்க்காக காத்திருக்கும் கௌதம் மேனன்

Trending News