Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விக்ரம் பட 500 கோடி வசூலுக்கு லோகேஷ் மட்டுமே காரணம்.. கமலஹாசனை சீண்டி பார்க்கும் தயாரிப்பாளர்

விக்ரம் பட 500 கோடி வசூலுக்கு லோகேஷ் மட்டுமே காரணம்.. கமலஹாசனை சீண்டி பார்க்கும் தயாரிப்பாளர்

உலகநாயகன் கமலஹாசன் பல வருடம் சினிமா துறையில் இருந்தாலும் அவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் தான் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இப்படம் 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது. விக்ரம் படத்தை கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் […]

உலகநாயகன் கமலஹாசன் பல வருடம் சினிமா துறையில் இருந்தாலும் அவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் தான் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இப்படம் 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது. விக்ரம் படத்தை கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் விக்ரம் படத்தின் வெற்றிக்கு லோகேஷ் மட்டுமே காரணம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கமலஹாசனை சீண்டும் விதமாக சில விஷயங்களையும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது தயாரிப்பாளர் கே ராஜன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம் கமலஹாசன் இப்படத்தில் எந்த விஷயத்திலும் தலையிடாமல் இருந்தது தான் எனக் கூறி உள்ளார். அதாவது கமலஹாசன் நடிக்கும் பெரும்பான்மையான படங்களில் கதையில் நிறைய மாற்றங்கள் சொல்வார்.

இதனால் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும் நிறைய படங்கள் தோல்வியை தழுவியுள்ளது. ஆனால் கமலஹாசன் ஒரு நல்ல நடிகர், சகலகலா வல்லவன் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. படத்தில் நடிப்பதை காட்டிலும் தேவையில்லாமல் கதையில் தலையிடுவது அவருடைய வாடிக்கை.

இது சினிமா துறையில் உள்ள அனைவருக்குமே தெரியும். ஆனால் விக்ரம் படத்தில் கமலஹாசன் நடித்து மட்டும்தான் கொடுத்துள்ளார். லோகேஷின் வேண்டுகோளுக்கு இணங்க கதையில் கமலஹாசன் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால்தான் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அதுமட்டுமன்றி அரசியலிலும் கமலஹாசனால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. நீ எல்லாம் அரசியலுக்கு லாயக்கு இல்லை என மக்கள் கமலஹாசனை வீட்டுக்கு அனுப்பியதாக கே ராஜன் அந்த ஊடகத்தில் பேசியிருந்தார். தற்போது உலக நாயகன் ரசிகர்கள் அந்த தயாரிப்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.