Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜுக்கு பிடித்த கமல் படம்.. கொஞ்ச தவறவிட்டாலும் மொத்தமும் போச்சு

லோகேஷ் கனகராஜுக்கு பிடித்த கமல் படம்.. கொஞ்ச தவறவிட்டாலும் மொத்தமும் போச்சு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூலை பெற்று வருகின்றது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்களில் விக்ரம் படம் அளவிற்கு எந்த படத்திற்கும் இவ்வளவு வரவேற்பு கிடைத்தது இல்லை. விக்ரம் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூலை பெற்று வருகின்றது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்களில் விக்ரம் படம் அளவிற்கு எந்த படத்திற்கும் இவ்வளவு வரவேற்பு கிடைத்தது இல்லை.

விக்ரம் படத்தில் கமலஹாசன் தனக்கென ஒரு காட்சியும் வைக்க வேண்டாம் அனைவருக்கும் ஏற்றபடி காட்சிகள் அமைக்கும்படி லோகேஷ் இடம் கமல் கூறியதாகவும், அதனால்தான் படம் மிக அற்புதமாக அமைந்ததாக லோகேஷ் கூறியிருந்தார். மேலும் லோகேஷ், கமலஹாசனின் ஒரு தீவிர ரசிகர் ஆவார்.

இதனால் கமலின் ஒரு படம் கூட விடாமல் லோகேஷ் எல்லாவற்றையும் பார்த்துள்ளார். அதில் தனக்கு மிகவும் பிடித்த படம் என்று விருமாண்டி படத்தை லோகேஷ் கூறியுள்ளார். ஏனென்றால் இப்படத்தில் கமலஹாசன் மொட்டை அடித்தபடியே ஒரு காட்சியில் நடித்து இருப்பார். ஏனென்றால் அந்த காட்சியை ஒரே ஒரு முறை தான் எடுக்க முடியும்.

காரணம், மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் போதே அந்த காட்சி எடுப்பதினால் கொஞ்சம் தவறினாலும் மீண்டும் மொட்டை அடிக்க முடியாது. இதனால் ரொம்ப தத்ரூபமாக தான் அந்த காட்சி எடுக்க வேண்டும். அதுவும் கமலஹாசன் அவர்கள் படத்தை இயக்கி, நடித்து இருந்தது தனக்கு பிரமிப்பாக இருந்ததாக லோகேஷ் கூறியுள்ளார்.

மேலும், கமல்ஹாசன் அவர்கள் வரிசையில் அனைத்து படமும் தனக்கு பிடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சில விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அதேபோல் கமலுடன் விக்ரம் படத்தில் பணியாற்றியது தன்னுடைய பாக்கியம் என்றும் லோகேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் ஒரு படம் உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை, விரைவில் கண்டிப்பாக கமலுடன் இணைந்து பணியாற்றுவேன் என லோகேஷ் உறுதியளித்துள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.