Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அட்லியை விரட்டிய லோகேஷ் கனகராஜ்.. முகம் காட்டாமல் மும்பையிலேயே இருப்பதன் காரணம்

அட்லியை விரட்டிய லோகேஷ் கனகராஜ்.. முகம் காட்டாமல் மும்பையிலேயே இருப்பதன் காரணம்

அட்லி கொரோன ஆரம்பித்த காலத்திலிருந்ததே மும்பையில் தான் இருந்து வருகிறார். மும்பையில் ஷாருக்கானை வைத்து தற்போது ஒரு படத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறார். அந்த படமும் இப்போதைக்கு முடிந்தபாடில்லை. இந்த படத்தில் ஓவர் பெர்பெக்சன் பார்க்கிறார் ஷாருக்கான். ஒரு […]

அட்லி கொரோன ஆரம்பித்த காலத்திலிருந்ததே மும்பையில் தான் இருந்து வருகிறார். மும்பையில் ஷாருக்கானை வைத்து தற்போது ஒரு படத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறார். அந்த படமும் இப்போதைக்கு முடிந்தபாடில்லை. இந்த படத்தில் ஓவர் பெர்பெக்சன் பார்க்கிறார் ஷாருக்கான்.

ஒரு காலத்தில் தமிழில் கொடிகட்டிப் பறந்த அட்லி இப்பொழுது இருக்கிற இடம் தெரியாமல் இருந்து வருகிறார். இதற்கு கோடம்பாக்கம் வட்டாரத்தில் பல காரணங்கள் கூறி வருகின்றனர். அட்லீயிடம் சரக்கு தீர்ந்துவிட்டது, மேலும் அவர் எடுக்கும் படங்கள், ஏதாவது ஒரு படத்தின் தழுவலாகவே இருக்கிறது என்ற பேச்சுகள் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.

ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்களை எடுத்தார் அட்லி. மெர்சல், பிகில் தெறி என அடுத்தடுத்து இளைய தளபதியை வைத்து அசத்தினார். இதனாலேயே மொத்த கோடம்பாக்கம் கண்களிலும் அவர் விழுந்தார். எல்லா பக்கமும் விஜய்யை வைத்தே மூன்று படங்கள் இயக்கி விட்டார் என்ற ஒரு பெருமை இவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் அட்லி இயக்கி 3 படத்திற்கு பின் விஜய் அவரை கண்டுக்கவே இல்லை. இதற்கு மேலும் இவரிடம் படம் பண்ண வேண்டாம் என்று ஒதுங்கி விட்டாரா, இல்லை வேற டிராக்கில் போவோம் என்று நினைத்தாரா என்பது தெரியவில்லை. இப்பொழுது அவரை விட்டுவிட்டு வேறு ஒரு இயக்குனரை பிடித்துள்ளார் விஜய்.

தற்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் கலக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர், கைதி, விக்ரம் என அடுத்தடுத்து பல தடாலடி ஹிட் படங்களை கொடுத்து எல்லார் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இப்பொழுது பெரிய ஹீரோக்கள் எல்லாம் லோகேஷ்ற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து இருக்கிறார் லோகேஷ்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் விஜய் அவரை விடுவதாக தெரியவில்லை. அடுத்து விஜய் படத்தை இயக்கவிருக்கிறார். அட்லிக்கு கொடுத்ததை விட லோகேஷ்ற்கு நிறைய படங்கள் கொடுக்கும் திட்டம் விஜய் இருக்கிறதாம். இதுதான் இப்பொழுது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக உலாவிக் கொண்டிருக்கிறது.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.