புதன்கிழமை, ஜனவரி 15, 2025

படப்பிடிப்புத் தளத்தில் கெட்ட வார்த்தையில் கத்திய லோகேஷ்.. காரணம் கமல் தானாம்!

தமிழ் சினிமாவில் கைதி, மாஸ்டர் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

ரிலீசுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், இந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகள் மும்முரமாக நடக்கிறது. இந்தப்படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில், கௌரவ வேடத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பதால் இவர்களின் ரசிகர்கள் விக்ரம் படத்தை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்

அத்துடன் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

அதில் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்திற்கான முதல் காட்சி, உலக நாயகன் கமலஹாசனின் அலுவலகத்தில் எடுத்திருக்கிறார். அப்பொழுது கமலின் கண்கள் மட்டுமே க்ளோசப் ஷாட் வைக்கப்பட்டு அந்தக் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது.

சிறுவயதிலிருந்தே கமலஹாசனை பார்த்து வளர்ந்து சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட லோகேஷ் கனகராஜ், முதல் முதலாக நேருக்குநேர் உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பை பார்த்ததால் மெய்சிலிர்த்து பூரிப்படைந்துள்ளார்.

இதனால் அந்த ஷாட் முடிந்ததும் கட் சொல்வதற்கு பதிலாக கெட்ட வார்த்தையில் விக்ரம் படப்பிடிப்பு தளத்திலேயே கமல் முன்பு கத்தி விட்டதாக அவரே தன்னுடைய வாயால் பேட்டியளித்துள்ளார்.

Trending News