செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிளான் போட்டு வொர்க் அவுட் செய்த லோகேஷ்.. லியோ படத்தில் இருக்கும் சீக்ரெட்

Director Lokesh Kangaraj: சமீபகாலமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் அனைத்தும் வெற்றி கண்டு வருகிறது. அதை தொடர்ந்து தற்போது தனக்கென ஒரு யுனிவர்ஸ் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் பிளான் போட்டு வொர்க் அவுட் செய்து வரும் சம்பவம் குறித்த தகவலை இங்கு பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் இயக்குனர்களில் இவரும் ஒருவர். குறுகிய காலத்தில் இவரின் வளர்ச்சி கேட்பவரை வாயடைக்க செய்து வருகிறது. அவ்வாறு தன் திறமைக்கு வாய்ப்பு தேடி அலைந்த இவர் முதலில் அவியல் என்னும் குறும்படத்தை இயக்கினார். அதன்பின் வெள்ளி திரையில் 2017ல் மாநகரம் என்ற படத்தை இயக்கினார்.

Also Read: மாநகரம் முதல் லியோ வரை.. ஒவ்வொரு படத்திற்கும் லோகேஷ் எடுத்துக்கொண்ட ஷூட்டிங் நாட்கள் இதுதான்

அப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. சுமார் 45 நாட்களிலேயே இப்படப்பிடிப்பினை முடித்து விட்டாராம். அதைத்தொடர்ந்து 2019ல் கார்த்தி நடிப்பில் இவர் மேற்கொண்ட படம் தான் கைதி. இவருக்கு கிடைத்த வெற்றியை கொண்டு அடுத்த கட்ட பட வாய்ப்புகள் குவிந்தது. அதிலும் குறிப்பாக சுமார் 62 இரவில் இப்படத்தின் பட பிடிப்பினை முடித்து விட்டாராம்.

மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை 129 நாட்களில் மேற்கொண்டாராம். இவரின் இத்தகைய முயற்சி, தொடர் வெற்றியை தேடி தந்தது. அதன்பின் பரபரப்பாக எங்கு பார்த்தாலும் இவரைப் பற்றிய பேச்சு தான் அடிபட்டது. அதைத்தொடர்ந்து பிரம்மாண்டத்தின் படைப்பாய் கமல் நடிப்பில் வெளிவந்த படம் தான் விக்ரம். இப்படத்தை மேற்கொள்ள சுமார் 110 நாட்களே எடுத்துக் கொண்டாராம்.

Also Read: தயாரிப்பாளர்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் 3 படங்கள்.. தளபதி இயக்குனருக்கு வந்த சோதனை

ஆயினும் இப்படத்தில் இவர் மேற்கொண்ட படப்பிடிப்பு ஹாலிவுட் ரேஞ்சிற்கு போற்றப்பட்டது. தற்போது இவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் நிலைக்கு வளர்ந்து விட்டார். இவர் படைப்பில் அடுத்து இறங்க இருக்கும் படம் தான் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பினை 125 நாட்களிலேயே முடித்து விட்டாராம்.

அவ்வாறு பிளான் போட்டு தனக்கு கொடுத்த நேரத்தில் படப்பிடிப்பினை கச்சிதமாக முடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவரின் இத்தகைய பங்களிப்பு தான் இவர் படங்களை வெற்றி பெறச் செய்கிறது என சினிமா வட்டாரங்கள் பேசி வருகிறது.

Also Read: மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியா, தோல்வியா.? முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Trending News