Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் மாவீரன் 6-வது நாள் வசூல்.. இதுவரை எவ்வளவு கலெக்சன் தெரியுமா.!

சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் மாவீரன் 6-வது நாள் வசூல்.. இதுவரை எவ்வளவு கலெக்சன் தெரியுமா.!

மாவீரன் படத்தின் 6-வது நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது.

Maaveeran Collection Report: டாக்டர், டான் போன்ற படங்களில்100 கோடியை அசால்டாக தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன் அடுத்ததாக பிரின்ஸ் படத்தில் படு தோல்வியை சந்தித்தார். இதனால் மாவீரன் படத்தை தான் மலை போல் நம்பி இருந்தார். அந்த படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

மடோன் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர்  நடித்துள்ளார். இந்த படத்தை  சாந்தி டாக்கீஸ் தயாரித்து  வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கான காட்சிகள் அனைத்தும் 90% வரை  நிரம்பி விடுவதால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதுவும் மாவீரன் படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஆறாவது நாள் என்பதால் இன்று வரைக்கும் எவ்வளவு வசூல் ஆகி இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் மட்டும் தமிழகத்தில் 6.20 கோடியை வசூல் செய்திருக்கிறது.

மொத்தமாக ஐந்து நாட்களின் இறுதியில் உலகம் முழுவதும் மாவீரன் 50 கோடியை வசூலித்திருக்கிறது. அதுவும் இந்த நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால், தற்போதைய வசூலை விட வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இதன் வசூல் நிச்சயம் இரட்டிப்பாகும்.

மாவீரன் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 32.90 கோடியை வசூலித்த நிலையில், ஆறாவது நாளில் மட்டும் 7 கோடியை வசூலித்து இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் மாவீரன் 6-வது நாள் இறுதியில் 40 கோடி வசூலை எட்டி உள்ளது.

அதை போல் உலகம் முழுவதும் மாவீரன் 55 கோடியை ஒட்டுமொத்தமாக வாரி குவித்து இருக்கிறது. இதே வேகத்தில் சென்றால் மாவீரன் இன்னும் சில வாரங்களில் 100 கோடியை தொட்டுவிடும். இன்னும் மாவீரன் படத்தின் செகண்ட் ஆப் மட்டும் நன்றாக இருந்திருந்தால் இதைவிட அதிக வசூலை எதிர்பார்க்கலாம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.