Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

55 வயதில் மாதவனின் சொத்து மதிப்பு.. கோடிகளில் புரளும் மேடி

55 வயதில் மாதவனின் சொத்து மதிப்பு.. கோடிகளில் புரளும் மேடி

Madhavan : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிந்தவர்கள் சில பேர் தான். அப்படி தான் மாதவன் தனது கேரியரை தொடங்கி அடுத்து அடுத்து பல உயரங்களை அடைந்தார். அலைபாயுதே படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. குறிப்பாக பெண் […]

Madhavan : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிந்தவர்கள் சில பேர் தான். அப்படி தான் மாதவன் தனது கேரியரை தொடங்கி அடுத்து அடுத்து பல உயரங்களை அடைந்தார். அலைபாயுதே படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

குறிப்பாக பெண் ரசிகர்களை அவர் அதிகமாக கவர்ந்தார். மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு ராக்கெட்ரி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். மேலும் பாலிவுட்டில் சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அஜய் தேவகன், ஜோதிகா ஆகியோர் இந்த படத்தில் நடித்த நிலையில் மாதவன் வில்லனாக மிரட்டு இருந்தார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இப்போது மாதவனுக்கு 55 வயதாகும் நிலையில் அவரது சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.

55 வயதில் மாதவனின் சொத்து மதிப்பு

தற்போது வருடத்திற்கு 15 கோடி வரை மாதவன் சம்பாதித்த வருகிறார். அதுவும் அதிகமாக விளம்பரங்களில் மாதவன் நடித்து வருவாய் ஈட்டி வருகிறார். இப்போது அவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 115 கோடி என்று கூறப்படுகிறது.

மேலும் மாதவன் இடம் 80 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ், ஒரு கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஆகிய கார்களை வைத்துள்ளார். மாதவனுக்கு கார்களை விட பைக்குகளில் அதிக ஈடுபாடு உள்ளது. 40 லட்சம் மதிப்புள்ள ரோட் மாஸ்டர் க்ரூஸர் வைத்துள்ளார்.

இது தவிர யமஹா வி மேக்ஸ், பிஎம்டபிள்யூ கே 1600 ஜிட எல் மற்றும் டுகாட்டி டியாவெல் ஆகிய மாடல்களை வைத்துள்ளார். சென்னையில் 18 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு உள்ளது. இது தவிர துபாய் மற்றும் மும்பை ஆகிய இடங்களிலும் மாதவனுக்கு சொத்துக்கள் இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.