ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து ஆடிய 6 மலையாள படங்கள்.. பிரேமம் மலர் டீச்சர மறக்க முடியுமா!

தமிழ் ரசிகர்களும் நல்ல கதைக்களம் கொண்ட வேறு மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு தயங்காமல் தங்கள் ஆதரவை கொடுத்து அந்தப் படங்களை சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க செய்வார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆறு படங்கள் இன்றும் ரசிகர்களை ரிப்பீட் மோடில் பார்க்க வைக்கும் மலையாள படங்களாகும்.

பிரேமம்: 2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் காலாகாலமாக தமிழ் சினிமாவில் காட்டப்படும் ‘பப்பி, பெப்பி, கப்பி’ லவ் தான் இந்தப்படத்திலும் கதையாக அமைந்திருக்கும். ஒரு மாணவன் கல்லூரி மாணவன் ஜார்ஜ், மலர் டீச்சரை டாவடிக்கும் காட்சி படத்தில் செம க்யூட்டாக காட்டப்பட்டிருக்கும். இப்படி கல்லூரி காலத்தில் வரும் காதலை கண்முன் காட்டி இருக்கும் இந்தப் படம் சுமார் 200 நாட்களுக்கு மேல் தமிழக திரையரங்கிலும் ஓடி தமிழ் மக்களின் மனதைக் கவர்ந்த மலையாள படமாக மாறியது.

பெங்களூர் டேஸ்: 2014ஆம் ஆண்டு அஞ்சலி மேனன் எழுதி இயக்கிய இந்தப்படத்தில் ஆண், பெண் என பார்க்காமல் நண்பர்களாக இருக்கும் நஸ்ரியா, நிவின் பாலி, துல்கர் சல்மான் மூவரும் ஒரு கட்டத்தில் நஸ்ரியாவிற்கு திருமணம் ஆனபிறகு முன்புபோல் நஸ்ரியாவுடன் சகஜமாக பழக முடியாத சூழ்நிலை வருகிறது. எனவே இந்த மூன்று நண்பர்களும் திருமணத்திற்கு முன்பு இருந்தது போல் இருக்க முடியாமல் அவதிப்படும் பாசப் போராட்டத்தையும், அதற்காக அவர்கள் செய்யும் குறும்புத்தனமும் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கும். இந்த படம் தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற தலைப்பில் ஆர்யா, ஸ்ரீவித்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பெங்களூர் டேஸ் போல் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

புலி முருகன்: 2016 ஆம் ஆண்டு வைசாக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான அதிரடி சாகசம் திரைப்படம்தான் புலிமுருகன். இந்தப் படத்தில் மோகன்லால், கமலினி முகர்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இந்தப் படத்தில் புலி காட்டை விட்டு விட்டு மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் வந்த அவர்களை வேட்டையாடுவதை புலிமுருகன் தடுத்து புலியுடன் சண்டை போட்டு புலியை வேட்டையாடும் பதைபதைக்கும் காட்சி படத்தின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் புலி முருகன் தன்னுடைய மக்களை புலியிடமிருந்து காப்பாற்றுவதற்காக என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டு, புலியை எப்படி வெல்கிறான் என்பதே படத்தின் கதை.

திரிஷ்யம்: இரண்டு பாகங்களாக வெளியான இந்தப் படம் குடும்பத் கதைக்களத்தை கொண்டதால் மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த இந்தப்படத்தை, இதை தமிழிலும் ரீமேக் செய்தனர். மலையாளத்தில் முதல் பாகம் 2013ஆம் ஆண்டு அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. இதில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதே கதைக்களத்தை தமிழில் ‘பாபநாசம்’ என்ற தலைப்பில் உலகநாயகன் கமலஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். தன்னுடைய மகளை எதிர்பாராத விதத்தில் சீண்டிய ஒருவனை கொலை செய்ததால், அந்தக் கொலையை யாருக்கும் தெரியாமல் நாசூக்காக மறைத்த தந்தையின் கதைதான் இந்த படம்.

ஒரு வடக்கன் செல்பி: பிரஜித் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நிவின் பாலி, வினீத் ஸ்ரீனிவாசன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இந்த படத்தில் இரண்டு கதாநாயகன்கள் இருந்தும் இருவருக்கும் காதல் காட்சியோ, காதலிகளும் இல்லாததுதான் இந்தப் படத்தின் இயக்குனர் துணிச்சலாக மேற்கொண்ட விஷயம். எனவே கலகலப்பு குறையாத ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இந்தப் படம் எளிதில் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

லூசிபர்: பிரித்திவிராஜ் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இந்தப் படத்தில் மாநில முதல்வரின் மறைவுக்குப்பின் அவருடைய வளர்ப்பு மகனுக்கும் அவருடைய மருமகனுக்கும் ஏற்படும் முத்தம் தான் இந்த படத்தின் முழு கதையாக அமைந்திருக்கும்.

Trending News