Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தக் லைஃப் தோல்வியை முன்பே கணித்த மணிரத்னம்.. அடுத்த கூட்டணி யார் கூட தெரியுமா.?

தக் லைஃப் தோல்வியை முன்பே கணித்த மணிரத்னம்.. அடுத்த கூட்டணி யார் கூட தெரியுமா.?

Mani Ratnam : மணிரத்னம் தமிழ் சினிமாவில் மாஸ்டர் பீஸ் ஆன படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் வெற்றி, தோல்வி என்பது இரண்டுமே இருக்கும் என்பது போல இப்போது தக் லைஃப் படத்தின் மூலம் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறார். கமல், […]

Mani Ratnam : மணிரத்னம் தமிழ் சினிமாவில் மாஸ்டர் பீஸ் ஆன படங்களை கொடுத்திருக்கிறார். ஆனால் வெற்றி, தோல்வி என்பது இரண்டுமே இருக்கும் என்பது போல இப்போது தக் லைஃப் படத்தின் மூலம் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறார்.

கமல், சிம்பு என மாஸ் கூட்டணியை வைத்து பிரம்மாண்ட படத்தை கொடுப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் திரைக்கதை மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனால் இரண்டாம் நாளே தியேட்டர் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

மேலும் தக் லைஃப் படத்தை கமல், மணிரத்னம் மற்றும் உதயநிதி ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இப்போது போட்ட பட்ஜெட்டையே எடுக்க முடியுமா என்ற நிலையில் தான் இருக்கிறது. இந்த சூழலில் மணிரத்னம் அடுத்ததாக ரஜினி மற்றும் சிம்பு ஆகியோரின் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது.

மணிரத்னத்தின் அடுத்த கூட்டணி யார் தெரியுமா

ஆனால் இப்போது ரஜினி இந்த முடிவில் இருந்து பின்வாங்கி விட்டார். மேலும் சிம்புவுக்கு தக் லைஃப் கொடுத்த அடியே போதும் என்று அவரும் ஜகா வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. மணிரத்னமும் ஏற்கனவே தக் லைஃப் படம் இப்படி ஆகுமோ என்ற நினைப்பில் வேறு ஒரு ஐடியாவும் வைத்திருக்கிறார்.

அதாவது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புது முகங்களை வைத்து சிறிய பட்ஜெட் படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தாராம். அந்த படத்தை தான் அடுத்ததாக மணிரத்னம் இயக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த படத்தின் மூலம் மணிரத்னம் வெற்றியை கொடுத்தால் தான் அடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்க வாய்ப்பு வரும். மேலும் கமலும் இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் என தொடர் தோல்வியால் அடுத்து ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.