வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வனுக்காக கொண்டுவரப்பட்ட தங்க நகைகள்.. பார்த்து பார்த்து செதுக்கிய மணிரத்தினம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தற்போது உலகமெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 60 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.

இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இப்படி ஒரு முயற்சியை சாதித்து காட்டி இருக்கும் மணிரத்னத்திற்கு தற்போது பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Also read:ஷங்கர் படத்தில் நடிக்க முடியாமல் போன திரிஷா.. பல வருடமாக போராட்டம்

இந்நிலையில் குந்தவை மற்றும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா, ஐஸ்வர்யா ராய் இருவரும் பயன்படுத்திய நகைகள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. சோழர் கால வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் பல்வேறு வகையான நகைகளை அணிந்திருந்தார்கள்.

அதிலும் திரிஷா, ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த நகைகள் மிகவும் ஸ்பெஷலாக கொண்டுவரப்பட்டதாம். முழுக்க முழுக்க தங்கத்தினால் செய்யப்பட்ட அந்த நகைகளுக்காக ஒரு தனி குழுவே ஆறு மாதமாக கடும் உழைப்பை கொடுத்திருக்கிறது. மேலும் சோழர்கால கல்வெட்டுகளில் இருந்த தகவல்களை வைத்து தான் அந்த நகைகள் அனைத்தும் செய்யப்பட்டதாம்.

Also read:நினைத்த மாதிரியே ஏற்பட்ட சிக்கல்.. பொன்னியின் செல்வனால் தவிக்கும் அண்ணன் தம்பி

அதற்காக சில ஆராய்ச்சிகளும் செய்து இருக்கிறார்கள். மும்பையில் இருக்கும் மிகப்பெரிய நிறுவனம் தான் இந்த நகைகளை பெரும் முயற்சி செய்து வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள். அதிலும் திரிஷா, ஐஸ்வர்யா ராய் இருவரும் அணிந்த நகைகள் மட்டுமே கிட்டத்தட்ட இரண்டு கிலோவுக்கு மேல் இருக்குமாம்.

அந்த நகைகளுக்காக ஸ்பெஷல் லைட்டிங் ஏற்பாடுகளும் செய்து தான் அந்த காட்சிகளை மணிரத்தினம் படமாக்கி இருக்கிறார். அதனால் தான் அவர்கள் இருவரும் திரையில் தங்கப்பதுமைகளாக ஜொலித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். மேலும் சில நகைகள் செம்பிலும் செய்யப்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் மணிரத்தினம் பார்த்து பார்த்து செதுக்கியதால் தான் இந்த பொன்னியின் செல்வன் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது.

Also read:மணிரத்தினம் கிட்ட கத்துக்கோங்க ராஜமவுலி.. சொதப்பலை குத்தி காட்டும் ரசிகர்கள்

Trending News