Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மணிரத்தினம் தலையில் இடியை இறக்கிய ஏ ஆர் ரகுமான்.. முடிவுக்கு வராத பொன்னியின் செல்வன்

மணிரத்தினம் தலையில் இடியை இறக்கிய ஏ ஆர் ரகுமான்.. முடிவுக்கு வராத பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குனர் மணிரத்னம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்க உள்ளாராம். வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் […]

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குனர் மணிரத்னம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்க உள்ளாராம்.

வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தியா தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இத்திரைப்படம் அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே இத்திரைப்படத்தின் ரிலீஸ் செய்யும் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சோபிதா உள்ளிட்டோர் நடிப்பில் முதல் பாகம் உருவாகியுள்ளது. இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் திரைப்படத்தை பார்த்து உள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து அதிருப்தி தெரிவித்த நிலையில், மணிரத்னம் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே மீண்டும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளை ஷூட்டிங் எடுக்கப் போவதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏ ஆர் ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே, காற்று வெளியிடை, கடல், இருவர் உள்ளிட்ட திரைப்படங்களில் இசையமைத்த நிலையில், முதன்முதலாக ஏ ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து அதிருப்தி தெரிவித்ததால் மணிரத்னம் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

இது அனைத்துமே வதந்தி என படக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அதாவது ஏ ஆர் ரகுமான் இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிலவற்றை மாற்ற சொல்லியுள்ளார். அதனால் கிராபிக்ஸ் காட்சிகளில் மட்டும்தான் சில மாற்றம் இருக்குமே தவிர பொன்னியின் செல்வன் படத்தை மீண்டும் சூட்டிங் நடக்கும் என்பது எல்லாம் வதந்தி என கூறப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.