வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கு வெறித்தனமாக காக்க வைத்திருக்கும் மணிரத்தினம்.. செம ட்விஸ்ட்

பெரும் பொருட்செலவில் இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் இணைந்து நடித்திருக்கும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. முதல் நாளிலேயே இந்தப் படத்தை பார்ப்பதற்காக டிக்கெட் கிடைக்காமல் பலரும் கடுப்பாகி உள்ளனர்.

அந்த அளவிற்கு முன்பதிவுகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. பல முன்னணி திரையரங்குகளிலும் பொன்னியின் செல்வன் படத்திற்காக ஒரு வாரத்திற்கு ஹவுஸ்புல் ஆகி விட்டன. இப்படி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் இயக்குனர் மணிரத்னம் செம லிஸ்ட் ஒன்றை கிளைமாக்ஸில் வைத்து 2ம் பாகத்திற்கு ரசிகர்களை வெறித்தனமாக காத்திருக்க வைத்திருக்கிறார்.

Also Read: படத்தைப் விட இது பிரம்மாண்டமா இருக்கே, கொள்ளையடிக்கிறாங்க.. பொன்னியின் செல்வன் டிக்கெட் இவ்வளவா!

இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை ஒரே மூச்சில் 150 நாட்களுக்குள் முடித்து, சீக்கிரமே 2ம் பாகத்தையும் வெளியிடும் நோக்கத்தில் மணிரத்னம் செயல்பட்டிருக்கிறார். மேலும் இந்தப்படத்தில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாமலும் அதே சமயத்தில் அதிக செலவும் செய்யாமலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

மணிரத்னம் இதற்காக இந்திய திரையுலகில் இருக்கும் சிறந்த நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுத்து ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்திருக்கிறார். கல்கியின் நாவலை படித்த பலரும் ஆதித்த கரிகாலனை வைத்து முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அங்குதான் மணிரத்னம் செம ட்விஸ்ட் வைத்துள்ளார்.

Also Read: சர்வதேச அளவில் மிரட்ட வரும் பொன்னியின் செல்வன்.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சத்தமே இல்லாமல் டைட்டில் கேரக்டரை வைத்து முடித்திருப்பது படத்தைப் பார்க்கும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. முதல் பாகத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்டோரின் நடிப்பு வியக்க வைத்ததுடன், முதல் பாகத்தில் இடம்பெற்ற பயங்கர கப்பல் சண்டை காட்சி, கிளைமாக்ஸ் போன்றவை பிரமிக்க வைத்தது.

முதல் பாகத்தை பார்த்தபிறகு 2வது பாகம் எப்போது என ஏங்கிய ரசிகர்களுக்கு, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் ரிலீஸாகும் என சந்தோசம் செய்தியையும் ரசிகர்களுக்கு கொடுத்து இயக்குனர் மணிரத்னம் திக்குமுக்காட வைத்துள்ளார். முதல் நாளிலேயே ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பார்த்தால், ஒரு சில வாரங்களிலேயே பொன்னியின் செல்வன் 1000 கோடியை பாக்ஸ் ஆபீஸில் குவித்த விடும் என்றும் கணித்திருக்கின்றனர்.

Also Read: பாலிவுட் படங்களின் தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்.. நாசுக்காக சுதாரித்துக் கொண்ட மணிரத்தினம்

Trending News