Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மருதநாயகம் படத்தையும் விட்டுவைக்காத லோகேஷ்.. விக்ரம் படத்தில் வேற லெவலில் செய்த சம்பவம்

மருதநாயகம் படத்தையும் விட்டுவைக்காத லோகேஷ்.. விக்ரம் படத்தில் வேற லெவலில் செய்த சம்பவம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். கமலஹாசன் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை காட்டியிருப்பார். அதே போல் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். கமலஹாசன் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை காட்டியிருப்பார்.

அதே போல் விக்ரம் படத்திலும் கமல்ஹாசனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் விக்ரம் படம் வெளியாகி ஒரு வாரத்திற்குள் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. கமலின் முந்தைய படங்கள் செய்யாத சாதனையை விக்ரம்படம் செய்துள்ளது.

இதனால் உலகநாயகன் கமலஹாசன் தற்போது விக்ரம் படக்குழுவுக்கு பரிசை வாரி வழங்கி வருகிறார். லோகேஷ் கனகராஜுக்கு ஒரு கோடி மதிப்பிலான காரை பரிசாக வழங்கினார். அதேபோல் இப்படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கை பரிசாக அளித்தார்.

மேலும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்யை அன்பளிப்பாக கொடுத்து இருந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் ஆவார். இதனால் கமலின் முந்தைய படங்களில் பயன்படுத்திய பொருள்களை அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்துள்ளார்.

விக்ரம் படத்தில் பல துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதுவும் கடைசி காட்சியில் கமலஹாசன் பீரங்கியை பயன்படுத்தியிருப்பார். அந்த பீரங்கி உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி, நடித்த மருதநாயகம் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருந்தது.

அதைப் பார்த்து தான் வியந்ததாங்கவும் அதனால் விக்ரம் படத்தில் இந்த பீரங்கி காட்சியை வைத்ததாக லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


Marudhanagakam-Vikram
A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.