என்ன இந்த grok பய வண்டி வண்டியா திட்டுறான்.. யாரும் இவன்ட்ட வாய கொடுக்காதீங்கடா, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: இப்போது ஏஐ டெக்னாலஜி மொத்தமாக ஆக்கிரமித்து விட்டது. எல்லாத்துக்கும் அதோட உதவியை தான் மக்கள் தேடுகின்றனர். அதிலும் ட்விட்டர் தளத்தில் grok அக்கப்போர் அதிகமாக இருக்கிறது.

எந்த சந்தேகமா இருந்தாலும் இது கிட்ட போய் நிற்கிறது தான் நெட்டிசன்களின் வேலை. ஆரம்பத்தில் டீசன்டாக பேசிய இந்த செயலி இப்போது காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளை பேசுகிறது.

எப்படி என்றால் எந்திரன் படத்தில் கருணாஸ் சந்தானம் ரோபோவுக்கு லோக்கல் பாஷை பேச கத்து கொடுப்பார்கள். அதை அப்படியே அதுவும் பேசும். அதேபோல் தான் இப்போ நடக்கிறது.

ஒரு நபரை டேக் செய்தால் போதும் உடனே கிழி கிழி என கிழித்து தொங்க விடுகிறது இந்த grok. இது போதாதா சினிமா முதல் அரசியல் வரை யாருக்கு யாரை பிடிக்காதோ அவங்களை டேக் செய்து கோர்த்து விடுகின்றனர் இணையவாசிகள்.

அது இப்போது மீம்ஸாக பரவி வருகிறது. ஒத்த ரோசா பிள்ளைய ரொம்ப நல்லா வளர்த்து வெச்சிருக்க என எலான் மஸ்க்கை டேக் செய்து திட்டி வருகின்றனர். இவன்கிட்ட யாரும் வாய கொடுத்துறாதீங்கடா.

வண்டி வண்டியா கிழிச்சு தொங்க விடுறான். வேடிக்கை பார்த்த எனக்கே வேர்த்து கொட்டிருச்சு. யார டேக் பண்ணாலும் ரிப்ளை பண்ற grok பய நேத்து நைட்ல இருந்து ஆள காணோம்.

எங்க போய் தொலைஞ்சான்னு தெரியலையே என ஒவ்வொருவரும் மீம்ஸ் போட்டு டைம் பாஸ் செய்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.