என்னது அடுத்து போ**தை மருந்து சம்பந்தமா படம் எடுத்தாலும்.. தனிப்படை அமைச்சு தேட போறீங்களா, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: கடந்த சில நாட்களாகவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது விவகாரம் பற்றிய பேச்சு பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே டோலிவுட் பாலிவுட் என பல பிரபலங்கள் இந்த வழக்கில் சிக்கி இருக்கின்றனர்.

தற்போது இது கோலிவுட்டிலும் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அதேபோல் இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணா கூட சிக்கியுள்ளார்.

ஆனால் அவர் தரப்பு விளக்கம் வேறு மாதிரி இருக்கிறது. இருப்பினும் ஸ்ரீகாந்த் விசாரணையின் போது சில பல உண்மைகளை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க இணைய வாசிகள் வழக்கம் போல இதை மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். அதிலும் இனிமே இந்த மாதிரி தடை செய்யப்பட்ட பொருளை மையப்படுத்தி படம் எடுத்தாலும் தனிப்படை அமைச்சு தேடப் போறாங்க.

அப்படின்னா முதல்ல மாட்டுவது நம்ம லோகியா தான் இருக்கும். அது சரி ஸ்ரீகாந்த் இந்த பழக்கத்துக்கு அடிமையாகிட்டாரு. அவரை நியாயப்படி மறுவாழ்வு மையத்தில் தானே வச்சிருக்கணும்.

எதுக்கு ஜெயிலுக்குள்ள போட்டாங்க, அந்த பொருளை வித்தவங்கள தானே உள்ள தூக்கி போட்டு இருக்கணும் என நெட்டிசன்கள் குறும்பு செய்து வருகின்றனர்.

இப்படியாக இணையத்தில் பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.