ஒரு கப்புக்கு ஆசைப்பட்டது குத்தமாடா.. எங்களுக்கு கிடைக்காத கப்பு யாருக்கும் இல்லடி, வைரல் மீம்ஸ்

Memes: இந்தியா பாகிஸ்தான் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் இரு நாடுகளும் பதட்டத்தில் இருக்கின்றன.

அதேபோல் உலக நாடுகள் கூட இதை உற்று கவனித்து வருகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பதட்ட சூழ்நிலையில் இருக்கும் போது ஐபிஎல் போட்டி எதற்காக என்ற எண்ணம் எல்லாருக்குமே இருந்தது.

அதற்கேற்றார் போல் தற்போது ஐபிஎல் போட்டி காலவரை இன்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அநேகமாக இத்தோடு முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதை கிரிக்கெட் வெறியர்களும் நெட்டிசன்களும் தங்களுக்கு ஏற்றவாறு மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபேன்ஸ் ஜாலி மூடில் இருக்கின்றனர்.

ஏனென்றால் இந்த முறை சிஎஸ்கே அணி பயங்கரமாக சொதப்பி வந்தது. அதில் போட்டி ரத்து செய்யப்பட்டால் ஜாலிதான் என ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வருகின்றனர்.

மறுபக்கம் மத்தவங்க மாதிரி நாங்க என்ன ஆறு கப்பா வச்சிருக்கோம். ஒரு கப் அடிக்கணும்னு ஆசைப்பட்டது குத்தமா.

ஆர் சி பி இந்த வருஷம் கப் அடிச்சிடும்னு பார்த்தா இப்படி ஆயிடுச்சு. எல்லா டீம் பேரும் ஆர் சி பி னு வச்சா கூட இயற்கை சீற்றம் வந்து போட்டி நடக்காம போயிடும்.

அந்த லட்சணத்துல இருக்குது இவங்க ராசி என்ன பல ட்ரோல் மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.